ஜெனரல் Milley: சீனாவின் Hypersonic ஏவுகணை ஒரு Sputnik வளர்ச்சி

ஜெனரல் Milley: சீனாவின் Hypersonic ஏவுகணை ஒரு Sputnik வளர்ச்சி

Mark Milley என்ற அமெரிக்காவின் Chairman of the Joint Chiefs of Staff சீனா அண்மையில் ஏவிய hypersonic ஏவுகணை தொடர்பாக கருத்து கூறுகையில் சீனாவுக்கு இது சோவியத் Sputnik செய்மதி ஏவியதை போன்றது என்று கூறியுள்ளார்.

1957ம் ஆண்டு சோவியத் முதலில் Sputnik என்ற செய்மதியை ஏவியபோது அமெரிக்கா கலங்கி இருந்தது. குறிப்பாக Sputnik அமெரிக்கா மேல் சென்றது அமெரிக்காவின் பாதுகாப்புக்கும், பெருமைக்கும் பாதகமாக அமைந்து இருந்தது.

சீனாவின் hypersonic ஏவல் மிகவும் கவலைக்கு உரியது (very concerning) என்றும் அமெரிக்க ஜெனரல் Milley கூறியுள்ளார். அவரின் கூற்று “What we saw was a very significant event of a test of a hypersonic weapon system. And it is very concerning” என்றுள்ளது.

சீனாவின் இந்த ஏவுகணை ஏவல் தொடர்பாக ஏற்கனவே செய்திகள் கசிந்து இருந்தாலும், அமெரிக்க உயர் அதிகாரி ஒருவர் இது தொடர்பாக கருத்து தெரிவிப்பது இதுவே முதல் தடவை.

அமெரிக்காவும் இவ்வகை hypersonic ஏவுகணை தயாரிப்பில் ஈடுபட்டாலும், அமெரிக்கா இதுவரை ஏவலை வெற்றிகரமாக செய்திருக்கவில்லை.

அத்துடன் நேற்று செவ்வாய்க்கிழமை அமெரிக்காவின் இரகசிய இராணுவ தளபாடங்களை தயாரிக்கும் Raytheon என்ற நிறுவனத்தின் அதிபர் இவ்வகை ஆயுத தயாரிப்பில் அமெரிக்கா பல ஆண்டுகள் சீனாவுக்கு பின்னால் உள்ளது என்று கூறியுள்ளார் (several years behind).