டெல்லியில் வளி மாசு உச்சம், சுட்டியில் 556/500

டெல்லியில் வளி மாசு உச்சம், சுட்டியில் 556/500

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் கடந்த சில தினங்களாக வளி மாசு உச்ச நிலையில் உள்ளது. இங்கு தற்போது வளி மாசு சுட்டி (AQI அல்லது Air Quality Index) 556 ஆக உள்ளது.

AQI சுட்டி 0 முதல் 500 வரையான அளவிலேயே குறிப்பிடப்படும். இந்த அளவீட்டையே மீறி உள்ளது டெல்லி. மிக சுத்தமான வளி 0 சுட்டியை கொண்டிருக்கும். இதனுடன் ஒப்பிடுகையில் கனடாவின் Toronto நகரில் இன்று AQI 3 மட்டுமே.

இந்த மாசால் டெல்லியில் சுமார் 200 மீட்டர் தூரம் வரையே எதையும் காணக்கூடியதாக இருக்கிறது.

இப்பகுதியில் சுமார் 4,000 தோட்டங்கள் உழவர்களால் தீயிடப்பட்டு உள்ளன. பயிர்ச்செய்கை கழிவுகள், புல் போன்றவற்றை உள்ளவர்கள் இக்காலத்தில் எரிப்பது வளமை. உழவுக்கு இச்செயல் நன்று என்றாலும் இந்த தீ பெரும் சுவாசத்துக்கு ஆபத்தானது. இச்செயல் 35% மாசை டெல்லிக்கு வழங்குகிறது.

இங்கு வாகனங்களின் புகை 25% மாசுக்கு காரணமாக உள்ளது. தொழிற்சாலைகளின் புகை 10% மாசுக்கு காரணமாக உள்ளது. குடியிருப்புகளின் புகை 7% மாசுக்கு காரணமாக உள்ளது.

உலகின் முதல் 10 அசுத்த வளியை கொண்ட நகரங்கள்:
1. டெல்லி, இந்தியா: AQI 556
2. லாகூர், பாகிஸ்தான்: AQI 354
3. Sofia, பல்கேரியா: AQI 178
4. கல்கத்தா, இந்தியா: AQI 177
5. Zagreb, Croatia: AQI 173
6. மும்பை, இந்தியா: AQI 169
7. Belgrade, Serbia: AQI 165
8. Chengdu, சீனா: AQI 165
9. Skopje, North Macedonia: AQI 164
10. Krakow, போலாந்து: AQI 160

AQI கணிப்பு வளியில் எவ்வளவு பாதகமான PM 2.5 துகள்கள் உள்ளன என்பதை கணிப்பிடுகிறது. இங்கு PM 2.5 என்பது 2.5 micron விட்டத்துக்கும் குறைந்த அளவிலான பாதக துகள்களை குறிப்பிடுகிறது. ஒரு அங்குல நீளத்தில் சுமார் 25,000 micron இருக்கும்.

AQI: Air Quality Index
சுட்டி 0 முதல் 50: good air
சுட்டி 51 முதல் 100: moderate air
சுட்டி 101 முதல் 200: unhealthy air
சுட்டி 201 முதல் 300: poor air
சுட்டி 301 முதல் 400: very poor air
சுட்டி 401 முதல் 500: severe/hazardous air