தொடர்ந்தும் மதிப்பிழக்கும் இலங்கை நாணயம்

தொடர்ந்தும் மதிப்பிழக்கும் இலங்கை நாணயம்

இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் அழிந்து வருகிறது. சட்டப்படியான வங்கிகள் தற்போது அமெரிக்க டாலர் ஒன்றுக்கு சுமார் 315 ரூபாய்களை வழங்கி வருகின்றன. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இலங்கை நாணயம் சுமார் 57% வீழ்ச்சியை அடைந்து உள்ளது.

சுமார் ஒரு மாதத்திற்கு முன் டாலர் ஒன்றுக்கு வங்கிகள் சுமார் 200 ரூபாய்களை வழங்கியிருந்தன. தற்போது 315 ரூபாய்கள் வரை வழங்கப்படுகிறது.

இந்த மாதம் 18ம் திகதி (ஏப்ரல் 18, 2022) இலங்கைக்கு அடுத்த நெருக்கடியான மிக்க நாளாக இருக்கும். அன்றைய தினம் இலங்கை 2023ம் ஆண்டில் முதிர்வடையும் bond கடன் ஒன்றுக்கான $36 மில்லியன் வட்டியையும், 2024ம் ஆண்டு முதிர்வடையும் கடன் ஒன்றுக்கான $42.2 மில்லியன் வட்டியையும் செலுத்தல் அவசியம்.

இலங்கையிடம் தற்போது $2.3 பில்லியன் மட்டுமே உள்ளது.

ஜூலை 25ம் திகதி மேலுமொரு $1 பில்லியன் பெறுமதியான bond கடன் ஒன்றும் முதிர்வடைய உள்ளது.

இலங்கை bond கடன்களை கொள்வனவு செய்துள்ள Blackrock Inc., Ashmore Group Plc ஆகிய முதலீட்டு நிறுவனங்களே அதிக இழப்புகளை சந்திக்கவுள்ளன.