பூட்டின் ஒரு Genius, முன்னாள் சனாதிபதி ரம்ப் புகழாரம்

பூட்டின் ஒரு Genius, முன்னாள் சனாதிபதி ரம்ப் புகழாரம்

ரஷ்ய சனாதிபதி பூட்டின் அண்டை நாடான யுக்கிரைனுள் நுழைந்தது தொடர்பாக கருத்து தெரிவித்த முன்னாள் அமெரிக்க சனாதிபதி ரம்ப் ரஷ்ய சனாதிபதி பூட்டின் ஒரு “genius” என்று புகழ்பாடி உள்ளார். அத்துடன் வழமை போல் கூடவே தற்போதைய சனாதிபதி பைடெனை சாடியும் உள்ளார்.

பூட்டின் யுக்கிரைனுள் நுழைந்ததை அறிந்த போது தான் “How smart is that?” கேட்டுக்கொண்டதாகவும் ரம்ப் கூறியுள்ளார். அத்துடன் பூட்டினின் செயலை “pretty savvy” என்றும் புகழ்ந்துள்ளார் ரம்ப்.

அத்துடன் தான் பதவியில் இருந்திருந்தால் பூட்டின் யுக்கிரைனுள் நுழைந்து இருக்கார் என்றும் ரம்ப் கூறியுள்ளார். ஆனாலும் தனது கூற்றை அவர் விளக்கியிருக்கவில்லை.

பூட்டின் யுக்கிரைனுள் நுழைந்ததை பாராட்டிய முதல் மேற்கு நாட்டு அரசியல்வாதி ரம்பே.