பைடென், மோதி இணையம் மூலம் இன்று உரையாடல்

பைடென், மோதி இணையம் மூலம் இன்று உரையாடல்

அமெரிக்க சனாதிபதி பைடெனும், இந்திய பிரதமர் மோதியும் இன்று திங்கள் இணையம் மூலம் உரையாடி உள்ளனர். இந்த உரையாடலை தொடர்ந்து இரு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களும், வெளியுறவு அமைச்சர்களும் நேரடியாக சந்தித்து உரையாடி உள்ளனர்.

இம்முறை உரையாடல்களில் ரஷ்ய-யுகிரைன் யுத்தமே பிரதான பங்கை கொண்டிருந்தது. இந்தியா தொடர்ந்தும் ரஷ்யாவை கண்டிக்காதது, ரஷ்யாவிடம் இருந்து ஆயுதங்கள், எரிபொருள் கொள்வனவு செய்வது என்பன அமெரிக்காவுக்கு வெறுப்பை அளிக்கின்றன.

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா பெறும் எண்ணெய்யை நிறுத்த அமெரிக்கா கூறும் காலத்தில் இந்தியா வழமைக்கு மேலாக ரஷ்ய எண்ணெய்யை கொள்வனவு செய்துள்ளது. குறிப்பாக மேற்கின் தடைகள் காரணமாக ரஷ்யா சுமார் 20% வரை மலிவு விலையில் தனது எண்ணெய்யை இந்தியாவுக்கு விற்பனை செய்துள்ளது என்று கூறப்படுகிறது. கடந்த மாதம் மட்டும் இந்தியா 3 மில்லியன் பரல்கள் எண்ணெய்யை ரஷ்யாவிடம் இருந்து கொள்வனவு செய்துள்ளது.

கடந்த ஆண்டு இந்தியா மொத்தம் 16 மில்லியன் பரல் எண்ணெய்யை ரஷ்யாவிடம் இருந்து கொள்வனவு செய்து இருந்தது. ஆனால் இந்த ஆண்டின் முதல் 3 மாதங்களிலேயே இந்தியா 13 மில்லியன் பரல் எண்ணெய்யை ரஷ்யாவிடம் இருந்து கொள்வனவு செய்துள்ளது.