மீண்டும் சந்திரனுக்கு இந்தியாவின் ஆளில்லா கலம்

மீண்டும் சந்திரனுக்கு இந்தியாவின் ஆளில்லா கலம்

இன்று வெள்ளி இந்தியா மீண்டும் ஆளில்லா கலம் ஒன்றை சந்திரனுக்கு ஏவியுள்ளது. இக்கலம் ஏவுகணை ஒன்று மூலம் ஆந்திரா பிரதேச ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2:30 மணிக்கு ஏவப்பட்டது.

இது இந்தியாவின் இரண்டாம் முயற்சி. 2019ம் ஆண்டு இந்தியா ஏவிய கலம் சந்திரனில் பாதுகாப்பாக இறங்கவில்லை. அது சந்திரனில் விழுந்து மோதியது. விண்வெளி வீரரை காவும் கலம் பாதுகாப்பாக தரை இறங்கள் அவசியம்.

Chandrayaan 3 (சந்திர வாகனம் 3) என்ற இந்த கலம் Indian Space Research Organization (ISRO) என்ற அமைப்பால் தயாரிக்கப்பட்டது.

இந்தியா தனது கலத்தை பாதுகாப்பாக சந்திரனில் இறக்கினால் அவ்வாறு செய்த 4 ஆவது நாடாக இந்தியா அமையும். அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் ஏற்கனவே இந்த சாதனையை செய்துள்ளன.

தற்போது சந்திரனில் கால் பதித்த ஒரே நாடாக அமெரிக்கா உள்ளது.

சீனா 2030ம் ஆண்டி சந்திரனில் கால் பாதிக்க திட்டம் கொண்டுள்ளது. அவ்வாறு சீனா செய்தால் சந்திரனில் அது கால் பாதிக்கும் 2 ஆவது நாடாகும்.