Sam Altman மீண்டும் OpenAI நிறுவனத்தின் CEO பதவியை அடைய உள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை OpenAI நிறுவனத்தின் board திடீரென காரணம் எதுவும் இன்றி OpenAI நிறுவனத்தை ஆரம்பித்த Sam Altman என்ற CEO வை பதவி நீக்கம் செய்தது.
OpenAI இல் முதலீடு செய்திருந்த Microsoft திங்கள்கிழமை Altman க்கு பதவி வழங்கியது. பெருமளவு OpenAI ஊழியர்களும் தாமும் OpenAI ஐ விட்டு வெளியேற உள்ளதாக அறிவித்தனர்.
மிரண்டுபோன OpenAI புதிய board ஐ அமர்த்த, புதிய board செவ்வாய்க்கிழமை மீண்டும் Altman ஐ OpenAI நிறுவனத்தின் CEO ஆக பதவி வகிக்க கேட்டுள்ளது.
எவரும் அறியாது நிறுவனமாக இருந்த OpenAI தனது ChatGPT என்ற AI ஐ அறிமுகம் செய்த பின் பிரபலம் அடைந்து இருந்தது.
OpenAI வரும் காலங்களில் Microsoft இன் ஆளுமைக்குள் அடங்கலாம்.