மூடி உடைய, கிணற்றுள் வீழ்ந்து 13 பேர் பலி

மூடி உடைய, கிணற்றுள் வீழ்ந்து 13 பேர் பலி

இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட 13 பெண்களும், சிறுமிகளும் கிணறு ஒன்றுள் வீழ்ந்து பலியாகி உள்ளனர். இந்த சம்பவம் உள்ளூர் நேரப்படி இன்று புதன் மாலை 8:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

நிகழ்வில் கலந்துகொண்ட இவர்கள் கிணற்றை மூடி இருந்த இரும்பு தட்டு ஒன்றில் அமர்ந்து உள்ளனர். பாரம் அதிகமாக தட்டு உடைந்து கிணற்றுள் வீழ்ந்துள்ளது. கூடவே அதில் இருந்தோரும் வீழ்ந்து பலியாகினர்.

ஒவ்வொரு மணித்தோர் குடும்பங்களுக்கும் 4 லட்சம் உதவி பணம் வழங்க அரசு முன்வந்துள்ளது. அந்த மாநிலத்தில் தற்போது மாநில தேர்தல் இடம்பெறுகிறது.

மரணித்தோரில் ஒரு 1 வயது பெண் குழந்தையும், ஒரு 10 வயது சிறுமியும் அடங்குவர்.