மேடை நகைச்சுவையை கைவிடும் இந்திய இஸ்லாமியர்

மேடை நகைச்சுவையை கைவிடும் இந்திய இஸ்லாமியர்

Munawar Faruqui என்ற மேடை நகைச்சுவை செய்து உழைப்பவர் (stand-up comedian), வயது 29, இந்துவாதிகளின் மிரட்டல்கள், தொல்லைகள் காரணமாக தனது தொழிலை கைவிடுவதாக கூறியுள்ளார். இவரின் நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ள மண்டபங்களை பா.ஜ. ஆதரவு இந்துவாதிகள் மிரட்டி, தாக்குவதால் மண்டபங்களும் நிகழ்ச்சிகளை இரத்து செய்துள்ளன.

கடந்த 2 மாதங்களில் குறைந்தது இவரின் 12 நிகவுகள் இரத்து செய்யப்பட்டு உள்ளன. நேற்று ஞாயிறு கர்நாடகா மாநிலத்து பெங்களூர் நகரில் இடம்பெறவிருந்த இவரின் நகைசுவை நிகழ்வும் இரத்து செய்யப்பட்டு உள்ளது. அதன் பின்னரே அவர் தனது தொழிலை கைவிட்டு உள்ளார்.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் 1ம் திகதியும் மத்திய பிரதேசத்தில் இடம்பெற்ற இவரின் நிகழ்வு ஒன்றில் இந்துவாதிகளால் இவர் துன்புறுத்தப்பட்டு இருந்தார். அப்பகுதியில் உள்ள Hindu Rakshak Sangathan என்ற குழுவே குழப்பத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இவர் மீதான ஆதாரம் அற்ற குற்றச்சாட்டை பா.ஜ. உறுப்பினர் ஒருவரின் மகனே முதலில் முன்வைத்து இருந்தார். முதலில் இந்த நகைச்சுவையாளர் இந்து சமயத்தை நகைச்சுவை மூலம் இகழ்வு செய்தார் என்று கூறப்பட்டது. ஆனால் ஆதாரம் எதுவும் வழங்கப்படவில்லை. பின்னர் நகைச்சுவையாளர் இந்து மதத்தை இழிவு செய்ய திட்டமிட்டு இருந்தார் என்றும், அதை தாம் ஒட்டுக்கேட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த விசயம் நீதிமன்றம் சென்றது. Indore நகர போலீஸ் அதிகாரி தம்மிடம் ஆதாரம் உள்ளது என்று கூறினாலும் அதை நீதிமன்றில் சமர்ப்பிக்கவில்லை. பின்னர் அவ்வூர் போலீஸ் அதிகாரி நகைச்சுவையாளர் அவதூறு செய்ய திட்டமிட்டார் (going to) என்று கூறினார். ஆனாலும் நீதிமன்றம் காரணம் இன்றி அவரை 37 தினங்கள் சிறையில் வைத்தது.

பெப்ரவரி மாதம் இந்தியாவின் உயர்நீதிமன்றம் தகுந்த ஆதாரம் இன்மையால் இவரை bail லில் விடுதலை செய்தது.

இவரின் ரசிகர்கள் பலரும் இந்துக்களே. Thodur Madabusi Krishna என்ற பாடகர் Faruqui யை சென்னை நிகழ்வு ஒன்றுக்கு அழைத்துள்ளார்.

இலங்கையில் பௌத்த வாதிகள் இந்துக்களுக்கு எதிராக தாண்டவம் ஆடும்போது இந்திய இந்து வாதிகள் அங்குள்ள இஸ்லாமியருக்கு எதிராக தாண்டவம் ஆடுகின்றனர். ஆனால் எல்லைக்கு அடுத்த பக்கத்தில் சீனா வேகமாக வளர்கிறது.