மேற்கின் தடைகளை மீறி ரஷ்யா பொருளாதாரம் நலம்

மேற்கின் தடைகளை மீறி ரஷ்யா பொருளாதாரம் நலம்

ரஷ்யா யூக்கிறேனுள் நுழைந்த பின் மேற்கு நாடுகள் ரஷ்யா மீது கடும் பொருளாதார தடைகளை விதித்து இருந்தன. அவ்வகை கடும் தடைகளுக்கு மத்தியிலும் ரஷ்ய பொருளாதாரம் கணிசமான அளவில் நலமாக உள்ளதாக International Monetary Fund இன்று செவ்வாய் கூறியுள்ளது.

எரிபொருள் விலை அதிகமாக இருப்பது ரஷ்ய பொருளாதாரம் நலமாக இருப்பதற்கு ஒரு பிரதான காரணம் என்கிறது IMF. ஆனாலும் எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ரஷ்யா மீதான தடையும் ஒரு பிரதான காரணம்.

யுத்தத்துக்கு முன் $80 ஆக இருந்த பரல் எண்ணெய் மார்ச் மாதம் $129 ஆக உயர்ந்து இருந்தது. எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடான ரஷ்யா அதனால் பெருமளவு வருமானத்தை அடைந்தது.

இந்த ஆண்டுக்கான இரண்டாம் காலாண்டு பொருளாதார வளர்ச்சி ரஷ்யாவில் எதிர்பார்த்ததிலும் அதிகமாக உள்ளது.