ரம்ப் வரிகளின் மத்தியிலும் சீன ஏற்றுமதி 6.1% ஆல் அதிகரிப்பு 

ரம்ப் வரிகளின் மத்தியிலும் சீன ஏற்றுமதி 6.1% ஆல் அதிகரிப்பு 

சீனாவில் இருந்து அமெரிக்கா செல்லும் பொருட்களுக்கு அமெரிக்க சனாதிபதி ரம்ப் பெருமளவு இறக்குமதி வரிகளை திணித்ததால் அமெரிக்காவுக்கான சீன ஏற்றுமதி பெரும் வீழிச்சியை அடைந்துள்ளது. ஆனாலும் உலக அளவில் இந்த ஆண்டு முதல் 9 மாதங்களில் சீன ஏற்றுமதி 6.1% ஆல் அதிகரித்து உள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் மட்டும் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு செப்டம்பரில் சீன ஏற்றுமதி 8.3% ஆல் அதிகரித்து உள்ளது.

அத்துடன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாத சீன மொத்த ஏற்றுமதியின் 15.5% அமெரிக்கா சென்று இருந்தது. அது $47 பில்லியன் பெறுமதியான ஏற்றுமதி. இந்த ஆண்டு செப்டம்பர் மாத மொத்த சீன ஏற்றுமதியின் 10.4% மட்டுமே அமெரிக்கா சென்றுள்ளது. இது $34.3 பில்லியன் பெறுமதியான ஏற்றுமதி.

ரம்பின் வரி யுத்தம் காரணமாக சீனாவுக்கான அமெரிக்காவின் ஏற்றுமதியும் பெருமளவில் குறைந்து உள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சீனா $110 மில்லியன் பெறுமதியான அமெரிக்க மாட்டு இறைச்சியை கொள்வனவு செய்திருந்தது. இந்த ஆண்டு செப்டம்பர் மாத கொள்வனவு $11 மில்லியன் மட்டுமே. அது 90% வீழ்ச்சி.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் சீனா 4.92 மில்லியன் தொன் அமெரிக்க சோயாவை இறக்குமதி செய்திருந்தது. ஆனால் செப்டம்பர் மாதம் சீனா 0 தொன் அமெரிக்க சோயாவை இறக்குமதி செய்துள்ளது.

மொத்தத்தில் சீனாவின் வர்த்தகத்தை அமெரிக்கா கட்டுப்படுத்த முடியாத நிலை தோன்றியுள்ளது.