33,000 விமான சேவைகளை Lufthansa நிறுத்தம்

33,000 விமான சேவைகளை Lufthansa நிறுத்தம்

மீண்டும் இந்த winter காலத்தில் Lufthansa என்ற ஜெர்மனியின் விமானசேவை 33,000 சேவைகளை நிறுத்துகிறது. அது அந்த நிறுவனத்தின் மொத்த சேவையின் 10%. ஒமிக்கிறான் தொற்று காரணமாக மக்கள் பணிப்பதை குறைப்பதே மேற்படி சேவை குறைப்புக்கு காரணம்.

இதுவரை கொள்வனவு செய்யப்பட்ட ஜனவரி, பெப்ரவரி கால விமான பயணங்களின் தொகை எதிர்பார்த்ததிலும் குறைவாகவே உள்ளதாக Lufthansa கூறியுள்ளது.

ஜெர்மனி, சுவிற்சலாந்து, அஸ்திரியா, பெல்ஜியம் ஆகிய Lufthansa சேவை வழங்கும் பிரதான ஐரோப்பிய சந்தையிலே முடக்கங்கள் காரணமாக விமான பயணிகள் தமது பயணங்களை குறைக்கின்றனர்.

அத்துடன் தோற்று காரணமாக தேவையான விமானிகளையும், பணியாளர்களையும் கொள்ள முடியாது உள்ளது என்றும் Lufthansa கூறியுள்ளது.

ஆனாலும் சில பிரதான விமான நிலையங்களில் கொண்டுள்ள takeoff, landing உரிமைகளை இழக்காது இருக்கும் நோக்கில் சுமார் 18,000 சேவைகளை பயணிகள் இன்றியும் Lufthansa இக்காலத்தில் செய்யும்.