அஜர்பைஜான், அர்மீனியா மோதலுக்கு 220 பேர் பலி

அஜர்பைஜான், அர்மீனியா மோதலுக்கு 220 பேர் பலி

அஜர்பைஜானுக்கும் (Azerbaijan), அர்மீனியாவுக்கும் (Armenia)  இடையில் தொடரும் மோதல்களுக்கு தற்போது குறைந்தது 220 பேர் பலியாகி உள்ளனர். Azerbaijan னின் Nagorno-Karabakh மலைப்பகுதியில் வாழும் ஆர்மீனியருக்கும் Azerbaijan அரச படைகளுக்கும் இடையிலேயே இந்த மோதல்கள் தொடர்கின்றன.

இன்று ஆர்மினியர் Azerbijan னின் இரண்டாவது பெரிய நகரமான Ganja னில் உள்ள விமான தளம் மீது தாக்குதலை செய்துள்ளனர். ஆர்மீனியாவின் யுத்த விமானம் ஒன்றை துருக்கி சுட்டு வீழ்த்தியும் இருந்தது.

துருக்கி அஜர்பைஜானுக்கு ஆதரவு வழங்குகிறது. துருக்கியின் தலையீட்டை கண்டிக்கிறது அர்மீனியா. அர்மீனியாவில் ரஷ்ய படை தளங்கள் உண்டு.

சோவியத் காலத்தில் இந்த மலைப்பகுதி அஜர்பைஜானுக்கு உரிய சுயாதீன பகுதியாக இருந்தது. இங்கு கிறீஸ்தவ அர்மீனியரும், இஸ்லாமிய துருக்கியரும் இங்கு வாழ்கின்றனர். சோவியத் வீழ்ச்சியின் பின் இங்கு மோதல்கள் ஆரம்பித்து இருந்தன.