அமெரிக்க சனாதிபதி ரம்புக்கும், சில கிழமைகளுக்கு முன் ரம்பின் அரசில் அவரின் வலது கரமாக இருந்த இலான் மஸ்க்குக்கும் இடையிலான முரண்பாடு செவ்வாய்க்கிழமை மீண்டும் உக்கிரம் அடைந்துள்ளது, அமெரிக்க Independence Day யான ஜூலை 4ம் திகதிக்கு முன் ரம்ப் தனது “Big and Beautiful” வரவு-செலவு திட்டத்தை போதிய ஆதரவு பெற்று சட்டமாக நடைமுறை செய்ய ரம்ப் கடுமையாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் இலான் இந்த வரவு செலவு-திட்டம் அமெரிக்காவுக்கு ஆபத்தானது என்று கூறி கடுமையாக எதிர்த்து வருகிறார், […]
பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான கனடிய அரசு தான் நடைமுறை செய்யவிருந்த Digital Sales Tax (DST) என்ற புதிய வரியை அமெரிக்க சனாதிபதி ரம்பின் அழுத்தம் காரணமாக கைவிடுகிறது. இந்த அறிவிப்பை கனடா ஞாயிறு மாலை தெரிவித்து உள்ளது. இந்த அறிவிப்புக்கு முன் ரம்ப் தான் கனடாவுடன், DST வரி காரணமாக, மேற்கொண்ட பேசப்போவது இல்லை என்று கூறி மிரட்டி இருந்தார். கனடிய அரசியல்வாதிகள் தமது கதிரைகளை பாதுகாக்க நீண்ட காலமாக இவ்வாறு அமெரிக்க அரசுகளுக்கு […]
செவ்வாய் கிரகத்தில் இருந்து கல், மண் போன்ற மாதிரிகளை பூமிக்கு எடுத்து வரும் முயற்சியை அமெரிக்காவின் ரம்ப் அரசு செலவு காரணமாக கைவிட, சீனா இதற்கான பணிகளை வேகமாக செய்து வருகிறது. அதனால் சீனாவே செவ்வாய் கிரக மாதிரிகளை பூமிக்கு எடுத்து வரும் முதல் நாடாகலாம். அமெரிக்காவும், ஐரோப்பாவும் இணைந்து செய்த ஆய்வு கணிப்பு 2040ம் ஆண்டில் செவ்வாய் மாதிரியை எடுத்து வர குறைந்தது $11 பில்லியன் செலவாகும் என்று கூறுகிறது. ஆனால் சீனா 2028ம் ஆண்டு Tianwen-3 […]
அமெரிக்க சனாதிபதி ரம்ப் தொட்டதெல்லாம் பொன் ஆகவில்லை. ஆனாலும் அவருக்கு தொடர்ந்தும் விரும்பிய எல்லாவற்றையும் தொட சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இந்நிலை அமெரிக்காவுக்கு நயமாகுமா அல்லது அழிவை ஏற்படுத்துமா என்பதை 10 அல்லது 20 ஆண்டுகள் சென்ற பின்னரே அறிய முடியும். அண்மையில் ரம்ப் ஈரானின் அணு உலைகள் மீது குண்டு வீச அமெரிக்க சட்டப்படி காங்கிரஸிடம் உரிமை பெறப்படவில்லை. இந்த குண்டு வீச்சு தற்போது ஓரளவு தோல்வியிலேயே முடிந்துள்ளது. அத்துடன் சீனா போன்ற எதிரிகளும் இந்த குண்டின் […]
அமெரிக்க சனாதிபதி ரம்ப் கனடாவுடனான வர்த்தக பேச்சுக்களை இடைநிறுத்தி கொள்வதாக வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார். இம்முறை கனடா நடைமுறை செய்யவுள்ள Digital Service Tax (DST) அமெரிக்காவால் காரணம் கூறப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி ரம்ப் மேலும் சில இறக்குமதி வரி தண்டனைகளை கனடாவுக்கு நடைமுறை செய்ய உள்ளதாகவும் அறிவித்துள்ளார். முற்காலங்களில் பொருட்கள் மட்டுமே எல்லைகளை தாண்டி விற்பனை செய்யப்பட்டன. அதனால் இதுவரை பொருட்களுக்கு மட்டுமே இறக்குமதி வரிகள் அறவிடப்பட்டன. தற்காலங்களில் இணையம் மூலம் பெருமளவு சேவைகள் எல்லைகள் தாண்டி செய்யப்படுகின்றன. […]
அமெரிக்க சனாதிபதி ரம்ப் ஆட்சியின் ஜனவரி முதல் மார்ச் 2025 வரையான முதலாம் காலாண்டில் அமெரிக்காவின் பொருளாதாரம் (GDP) 0.5% ஆல் வீழ்ச்சி அடைந்துள்ளது என்று இன்று வியாழன் அறிவிக்கப்படுள்ளது. முன்னர் 0.2% வீழ்ச்சி மட்டுமே எதிர்பார்க்கப்பட்டு இருந்தது. கடந்த 3 ஆண்டுகளின் பின் இவ்வாறு அமெரிக்க GDP வீழ்ச்சி அடைந்துள்ளது. 2024ம் ஆண்டின் இறுதி காலாண்டில், பைடென் ஆட்சியில், அமெரிக்காவின் GDP 2.4% ஆல் வளர்ந்து இருந்தது. ரம்பின் புதிய இறக்குமதி வரிகள் பல வழிகளில் […]
அமெரிக்காவின் மிகப்பெரிய நகர்களில் ஒன்றான நியூ யார்க் (New York) நகரின் அடுத்த முதல்வராக (Mayor) Zohran Mamdani என்ற இஸ்லாமியர் ஒருவர் வெற்றி அடையும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. Democratic கட்சி சார்பில் முதல்வர் பதவிக்கு போட்டியிடவுள்ள நபரை தெரிவு செய்யும் உட்கட்சி தேர்தலில் 33 வயதான Mamdani 43% வாக்குகள் பெற்று முன்னணியில் உள்ளார்.இவருக்கு எதிராக போட்டியிட்ட முன்னாள் New York மாநில ஆளுநர் Andrew Cuomo 36% வாக்குகளை மட்டும் பெற்று இரண்டாம் உள்ளார். தெற்காசிய இஸ்லாமிய வம்சம் […]
பொதுவாக இராணுவங்கள் தமது மிகப்பெரும் ஆயுதங்களை அவசரப்பட்டு பயன்படுத்துவது இல்லை. அவற்றை பயன்படுத்தி அவை கூறியபடி வெற்றியை தராவிட்டால் பாதிப்பு அதிகம். பதிலுக்கு பயன்படுத்தக்கூடும் என்று மிரட்டுவது தோல்வியை தராது எதிரிக்கு பயத்தை ஏற்படுத்தும். தற்போது வெளிவந்துள்ள ஆரம்ப கணிப்புகள் அமெரிக்கா வீசிய GBU-57 வகை குண்டுகள் மலைகளுக்கு அடியில் உள்ள ஈரானின் அணு உலைகளை அழிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த குண்டுகள் சிறிது மேற்பரப்பு அழிவுகளையே ஏற்படுத்தி உள்ளன. பாதகமான இந்த ஆரம்ப கணிப்புகளை கசிய விட்டவர் […]
அமெரிக்க சனாதிபதி ரம்ப் யுத்த நிறுத்தத்தை அறிவிக்க சற்று முன் ஈரான் இஸ்ரேல் மீது ஏவிய ஏவுகணைகள் Beer Sheva என்ற இஸ்ரேலிய நகரில் பெரும் அழிவுகளை ஏற்படுத்தியது. அங்கு குறைந்தது 5 பேர் பலியாகியும், பலர் காயமடைந்தும் இருந்தனர். இந்த தாக்குதலால் விசனம் கொண்ட இஸ்ரேல் ஈரான் மீது ரம்ப் யுத்த நிறுத்தத்தை அறிவித்த பின் தாக்குதல் செய்தது. அதனால் மூர்க்கம் கொண்ட ரம்ப் இஸ்ரேலை கடுமையாக வசை பாடினார். “I’m not happy with […]
இஸ்ரேலும், ஈரானும் இணங்கி கொண்ட ஒப்பந்தங்கள் எதுவும் இன்றி யுத்த நிறுத்தத்துக்கு இணங்கி உள்ளன என்று கூறப்படுகிறது. Qatar மூலமே இந்த இணக்கம் செய்யப்பட்டது. சனிக்கிழமை ஈரான் கட்டாரில் (Qatar) உள்ள அமெரிக்க Al Udeid படை தளம் மீது சிறிய அளவிலான ஏவுகணை தாக்குதல் ஒன்றை செய்திருந்தது. ஆனால் ஈரான் அமெரிக்காவுக்கு முன்னறிவிப்பு செய்திருந்ததால் பாதிப்புகள் மிக குறைவு. முதலில் ரம்ப் இஸ்ரேலும், ஈரானும் யுத்த நிறுத்தத்துக்கு இணங்கி உள்ளன என்று கூறியிருந்தார். இஸ்ரேல் தாக்காவிடின் […]