அந்நிய மாணவரால் அமெரிக்காவுக்கு வருடம் $31 பில்லியன்

ForeignStudents1

வெளிநாட்டு மணவாரால் வருடம் ஒன்றில் அமெரிக்கா சுமார் $31 பில்லியன் செலவாணியை பெறுகிறது என்று Voice of America அறிக்கை ஒன்று கூறியுள்ளது. இந்த அந்நிய செலவாணியை 1.2 மில்லியன் வெளிநாட்டு மாணவர்கள் செலுத்தி உள்ளனர்.
.
2015-2016 கல்வி ஆண்டுக்கான அந்நிய மாணவர் தொகையில் மீண்டும் முன்னணியில் இருப்பது சீன மாணவர்களே. மேற்படி கல்வி ஆண்டில் அமெரிக்காவில் படிக்க சென்ற சீன மாணவர் தொகை 328,547 என்று கூறப்படுகிறது. இவர்கள் $11.4 பில்லியன் செலவாணியை அமெரிக்காவுக்கு வழங்கி உள்ளனர்.
.
அடுத்ததாக இந்தியாவில் இருந்து பயணித்த 165,918 மாணவர்கள் சுமார் $5 பில்லியன் செலவாணியை அமெரிக்காவுக்கு வழங்கி உள்ளனர்.
.
அமெரிக்கா வரும் அந்நிய நாட்டு மாணவர்கள் பெரும்பாலும் பொறியியல், கணனி, முகாமைத்துவம் ஆகிய துறைகளிலேயே தமது உயர்கல்வியை தொடர்கின்றனர்.
.
New York University, University of Southern California, Arizona State University ஆகிய பல்கலைக்கழகங்கள் அதிகம் அந்நிய மாணவர்களை உள் எடுக்கின்றன.
.

அதேவேளை 2017 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவில் வெளிநாடுகளுக்கான உதவிகளுக்கு அமெரிக்க அரசு $42.3 பில்லியனை ஒதுக்கி உள்ளது (தனியார் உதவிகள் இதில் அடங்காது).
.

ForeignStudents2