அமிதாப்பின் மேலதிக வரி 1.66 கோடி

2001-2002 ஆண்டுக்கான வரியாக அமிதாப்பச்சன் மேலும் 1.66 கோடி இந்திய ரூபாய்களை செலுத்தவேண்டும் என்பதை நேற்று செவ்வாய்க்கிழமை (2013:01:08) வெளியிட்ட முடிவில் இந்திய Supreme Court உறுதி செய்துள்ளது.

இந்திய வருமானவரி திணைக்களத்தின் கணிப்புப்படி அமிதாப்பின் 2001-2002 வரிகால வருமானம் 26 கோடி ரூபாய். ஆனால் அமிதாப் தனது வருமானமாக 3.23 கோடியையே பதிவு செய்திருந்தார். 2001-2002 ஆண்டுகளில் அமிதாப் பங்களித்த ‘Kaun Banega Crorepati’ என்ற தொலைக்காட்சி போட்டி நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த வருமானத்தை முழுமையாக அவர் உள்ளடக்கியிருக்கவில்லை.

2010 ஆம் ஆண்டில், ITAT (Income Tax Appellate Tribunal) இன் முடிவின்படி, பம்பாய் High Court அமிதாப்புக்கு வரி விலக்கை கொடுத்திருந்தது. ஆனால் அந்த வரிவிலக்கு அமிதாப்புக்கு செல்லுபடி அற்றது என மத்திய வருமானவரி திணைக்களம் Supreme Court இல் வழக்கை தாக்கல் செய்தது.

இந்தியாவில் ஒளிபரப்பப்பட்ட Kaun Banega Crorepati (பதம்: யார் கோடீஸ்வரர் ஆவார்) என்ற தொலைக்காட்சி போட்டி நிகழ்ச்சி ‘Who Wants to Be a Millionaire’ என்ற அமெரிக்க போட்டியின் பிரதியே. ஆரம்பத்தில் அமிதாப்பே இந்த போட்டியின் நடாத்துனர் (host) ஆக செயல்பட்டிருந்தார். Star India நிறுவனம் இதை ஒளிபரப்பு செய்திருந்தது. Slumdog Millionaire திரைப்படத்திலும் இப்போட்டி பின்னணியில் இருந்தது.