அமெரிக்காவின் அடுத்த சந்ததி யுத்த விமானம்

B2

அமெரிக்காவின் அடுத்த சந்ததி யுத்த விமானங்களை தயாரிக்கும் பெறுப்பை அமெரிக்காவின் Northrop Grumman என்ற நிறுவனம் பெற்றுள்ளது. அமெரிக்க பாதுகாப்பின் தலைமையகமான பென்ரகன் (Pentagon) இதை நேற்று செவ்வாய் கிழமை அறிவித்துள்ளது. இந்த திட்டம் U$ 60 பில்லியன் ($60,000,000,000) பெறுமானம் கொண்டது என கணிப்பிடப்பட்டுள்ளது.
.
Long Range Strike Bomber (LRS-B) வகையான இந்த யுத்த விமானங்கள் எதிரியின் எல்லைக்குள் ஆழ ஊடுருவி எதிரியின் முக்கிய இடங்களை தாக்கும் வல்லமை கொண்டிருக்கும். இவை போர்முனைக்கு அதிகம் பயன்படாது. தற்போது அந்த பணியை அமெரிக்காவுக்கு செய்வது B2 என்ற யுத்த விமானங்களே. இவை எதிரியின் ரேடார்களில் அகப்படாமல் ஊடுருவி தாக்கும். சதாம் மீதான முதல் போரின்போது அமெரிக்காவில் இருந்து புறப்பட்ட B2 விமானம் பத்தாத்தில் குண்டு போட்டு பின் அமெரிக்காவுக்கே திரும்பி இருந்தது. ஆனால் அந்த வல்லமை ரஷ்யா, சீனா போன்ற நாடுகளில் பரீட்சித்து பார்க்க சந்தர்ப்பம் இதுவரை இருந்திருக்கவில்லை.
.
இந்த புதிய விமானங்களில் 100 ஐ 2020 ஆம் ஆண்டளவில் அமெரிக்கா சேவையில் ஈடுபடுத்த திட்டம்.
.

தற்போதுள்ள B2 விமானங்களையும் Northrop நிறுவனமே தயாரித்திருந்தது. அப்போது அமெரிக்கா மொத்தம் 132 B2 வகை விமானங்களை கொள்வனவு செய்யும் என்று கூறியிருந்தாலும் இறுதியில் 21 விமானங்களை மட்டுமே கொள்வனவு செய்திருந்தது. அளவுக்கு அதிகமாக தயாரிப்பு செலவுகள் அதிகரித்ததும், Cold War மங்கிப்போனதுமே இதற்கு காரணம். ஒரு B2 விமானத்தின் விலை $2 பில்லியன் ஆகியிருந்தது. ஆனால் இந்த புதிய விமானம் $550 மில்லியன் (சுமார் $0.5 பில்லியன்) ஆக மட்டுமே இருக்கும் எனப்படுகிறது. அனால் உற்பத்தி செலவு அதிகரிப்பது வழமை.
.