அமெரிக்காவின் முதலாவது Ford-வகை விமானம் தாங்கி

USSFord

அமெரிக்கா இன்று சனிக்கிழமை தனது முதலாவது Ford வகை (Ford-class) விமானம் தாங்கி கப்பலை சேவையில் இட்டுள்ளது. USS Gerald R. Ford என்று பெயரிடப்பட்டு உள்ள இந்த விமானம் தாங்கிக்கான ஆரம்ப விழாவை டிரம்ப் முன்னின்று நடாத்தி உள்ளார். இந்த தாங்கி அமெரிக்காவின் 38 வது ஜனாதிபதியின் பெயரை கொண்டது.
.
தற்போது அமெரிக்காவிடம் இருக்கும் 10 விமானம் தாங்கிகளும் Nimitz வகையை சார்ந்தன.
.
Nimitz வகை தாங்கிகளுக்கும் Ford வகை தாங்கிகளுக்கும் இடையில் உள்ள வித்தியாசங்களுள் முக்கியமானது எவ்வாறு யுத்த விமானங்கள் இந்த தாங்கிகளில் இருந்து ஏவப்படும் என்பதாகும். Nimitz வகை விமானம் தாங்கிகளில் உள்ள குறுகிய ஓடுபாதையில் யுத்த விமானங்களை ஏற்ற நீராவி உந்தம் (steam catapults) பயன்படுத்தப்படும். ஆனால் Ford வகை தாங்கிகள் நவீன electromagnetic உந்தத்தை பயன்படுத்தும்.
.
ஒரு Ford வகை விமானம் தாங்கியின் பெறுமதி சுமார் $12.8 பில்லியன் ஆகும். மொத்தம் 100,000 தொன் எடை கொண்ட இந்த Ford வகை தாங்கி 337 மீட்டர் நீளத்தை கொண்டது. இதன் ஓடுபாதை 333 மீட்டர் நீளத்தையும், 78 மீட்டர் அகலத்தையும் கொண்டது. இதில் குறைந்தது 75 யுத்த விமானங்களை எடுத்து செல்லலாம். அணுசக்தியில் இயங்கும் இதன் வேகம் சுமார் 56 km/h ஆக இருக்கும்.
.

இந்த புதிய விமானம் தங்கி அண்மையில் சேவையில் இருந்து நீக்கப்பட்ட விமானம் தாங்கி USS Enterpriseயின் இடத்தை நிரப்பும்.
.