அமெரிக்காவின் 7th Fleet அதிகாரி பதவி நீக்கம்

7thFleet

அமெரிக்காவின் 7th Fleet இராணுவ அதிகாரி (commander) Vice Admiral Joseph Aucoin அவரது பதவியில் இருந்து இன்று புதன்கிழமை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். இவரின் இடத்துக்கு Vice Admiral Phillip Sawyer நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
.
அமெரிக்காவின் 7th Fleet ஆசியாவை மையமாக கொண்டது. இந்த இராணுவ அணியில் 60 முதல் 70 வரையான யுத்த கப்பல்கள் இருக்கும். அதில் சுமார் 18 ஆசியாவிலேயே நிலைகொண்டிருக்கும். அண்மையில் விபத்துகளுக்கு உள்ளான USS Fitzgerald என்ற யுத்த கப்பலும், USS John S. McCain என்ற யுத்த கப்பலும் இந்த 7th Fleet அணியை சார்ந்தவையே. முன்னையதில் 7 பேர் மரணமாகி இருந்தனர். பின்னையதில் 10 காணாமல் அல்லது மரணமாகி உள்ளனர்.
.
மேற்படி இரண்டு கப்பல்களின் இரண்டு தலைமை அதிகாரிகளும் (commanders ), அவற்றின் இரண்டாம் நிலை அதிகாரிகளும் ஏற்கனேவே பதவி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
.
1953 ஆம் ஆண்டு உருவாக்கப்பட 7th Fleet அணி 1971 ஆண்டு கிழக்கு-மேற்கு பாகிஸ்தான் யுத்த காலத்தில் இந்தியாவை பயமுறுத்த பயன்படுத்தப்பட்டு இருந்தது. அப்போது USSR இந்தியாவின் உதவிக்கு வந்திருந்தது. தற்போது இந்த 7ஆம் படையணியில் சுமார் 300 யுத்த விமானங்களும், 40,000 படையினரும் உள்ளனர்.
.

1957 ஆம் ஆண்டு பிறந்த Joseph Aucoin, தனது 23 ஆவது வயதில், 1980 ஆம் ஆண்டில் அமெரிக்க படையில் இணைந்திருந்தார்.
.