அமெரிக்காவில் UFO?

AlbuquerqueAirControl

இந்த வருடம் பெப்ருவரி மாதம் 24 ஆம் திகதி அமெரிக்காவின் Arizona மாநில வானத்தில் பறந்துகொண்டிருந்த இரண்டு விமானங்களின் விமானிகள் அப்பகுதியில் பறந்த UFO ஒன்றை கண்டார்களா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.
.
பெப்ருவரி மாதம் 24 ஆம் திகதி Phoenix Air விமான சேவைக்கு சொந்தமான நடுத்தர அளவிலான Learjet விமானம் ஒன்று அரிசோனா (Arizona) மாநில வானத்தில், சுமார் 30,000 அடி உயரத்தில், உள்ளூர் நேரப்படி பிற்பகல் சுமார் 3:30 மணியளவில் பறந்து கொண்டிருந்தது. அப்போது அதன் விமானி தனது விமானத்துக்கு மேலால் வேறு விமானம் ஒன்று பறப்பதை அவதானித்து உள்ளார்.
.
வழமையாக ஒரு விமானத்துக்கு அண்மையில் இன்னோர் விமானம் பறக்கும் நிலை ஏற்படின், அப்பகுதி விமான போக்குவரத்தை மேற்பார்வை செய்யும் நிலையம் இரண்டு விமானங்களுக்கும் அந்த தகவலை வழங்கி அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கும்.
.
அப்படி ஒரு எச்சரிக்கையும் கிடைத்திராத நிலையில், Phoenix Air விமானத்தின் விமானி அப்பகுதிக்கு பொறுப்பான அல்பகேர்கி விமான கண்காணிப்பு நிலயத்திடம் (Albuquerque air traffic control center) “சுமார் 30 செக்கன்களுக்கு முன்னர் எங்களுக்கு மேலாக எவராவது கடந்து சென்றார்களா” என்று வினாவி உள்ளார். அப்படி வேறு விமானங்கள் அவ்விடத்தில் இல்லை என்று பதிலளித்தது கண்காணிப்பு நிலையம்.
.
அத்துடன் அவ்வேளை San Diego நகர் நோக்கி சென்றுகொண்டிருந்த American Airlines விமானத்திடம் (Flight 1095) அப்பகுதியில் வேறு விமானங்கள் தெரிகிறதா என்று பார்க்கும்படியும் கண்காணிப்பு நிலையம் கேட்டுள்ளது. ஒரு நிமிடத்துள் American Airlines விமானியும் தமக்கு மேலால் எதோ ஒன்று பறந்ததாக கூறியுள்ளார்.
.
மேற்படி பேச்சு ஒலி பதிவுகளை அமெரிக்காவின் Federal Aviation Administration (FAA) தற்போது வெளியிட்டு உள்ளது. இந்த பேச்சுக்களை தவிர புகைப்படம் போன்ற வேறு எந்த ஆதாரங்களும் இந்த சம்பவத்துக்கு இல்லை.
.
தொடர்பாடல்களின் சில வரிகள்:
.
Phoenix Air: “Was anybody above us that passed us like 30 seconds ago?”
FAA: “negative”
FAA: “American 1095, let me know if you see anything pass over you here in the next 15 miles”
American Airlines: “It is American 1095. Yeah, something just passed over us. I don’t know what it was, but it was at least two-three thousands feet above us”

.