அமெரிக்காவில் மேலும் 3 போலீசார் கொலை

Louisiana

அமெரிக்காவின் லூசியானா (Louisiana) மாநிலத்து Baton Rough நகரில் மீண்டும் பல போலீசார் மீது துப்பாக்கி தாக்குதல் இடம்பெற்று உள்ளது. இன்று ஞாயிரு காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 3 போலீசார் மரணம் அடைந்ததுடன், 3 பேர் காயம் அடைந்தும் உள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன. இந்த கொலை போலீஸ் தலைமையகத்துக்கு அண்மையிலேயே இடம்பெற்று உள்ளது.
.

பொலிஸாருக்கு ஒரு பொய் தகவல் அனுப்பி, போலீசார் அவ்விடத்துக்கு உதவிக்கு வந்தபோதே இந்த தாக்குதல் இடப்பெற்று உள்ளதாக கூறப்படுகிறது.
.

அண்மையில் இரண்டு கருப்பு இன அமெரிக்கர்கள் பொலிஸாரால் கொலை செய்யப்பட்டதை அடுத்து கருப்பு இன துப்பாக்கி தாங்கியோர் வெள்ளை நிற போலீசாரை கொலை செய்து வருகின்றனர். Dallas நகரில் சில தினங்களுக்கு முன் 5 போலீசார் இவ்வாறு கொலை செய்யப்பட்டு இருந்தனர்.
.