அமெரிக்காவுக்கான பிரித்தானிய தூதுவர் பதவி விலகுகிறார்

UK

அமெரிக்காவுக்கான பிரித்தானிய தூதுவர் Sir Kim Darroch ரம்ப் அரசை அவமதித்தது பகிரங்கத்துக்கு வந்ததன் காரணமாக பதவி விலகுகிறார்.
.
2017 ஆம் ஆண்டில் தூதுவர் பிரித்தானியாவுக்கு அனுப்பிய இரகசிய email ஒன்றில் ரம்ப் அரசு ஒழுக்கம் அற்றது என்றும், அறிவற்றது என்றும் (clumsy and inept) குறிப்பிட்டு இருந்தார். அந்த email அண்மையில் சிலரால் பகிரங்கப்படுத்தப்பட்டது.
.
பகிரங்கத்துக்கு வந்த விசயத்தை அறிந்த ரம்ப் தமது அரசு இனிமேல் பிரித்தானிய தூதுவருடன் இணைந்து செயல்படாது என்று கூறினார். தூதுவர் ஒரு stupid guy என்றும் கூறினார் ரம்ப். பிரித்தானிய தூதுவர் ஒருவருடன் இணைந்து செய்யப்பட ஒரு நாடு மறுப்பது இதுவே முதல் தடவை.
.
அதனால் வேறு வழி இன்றி தூதுவர் பதவியை விளக்குகிறார்.
.