அமெரிக்காவை தாக்கும் சூறாவளி Harvey

HurricaneHarvey

இன்று வெள்ளி இரவு 11:00 மணியளவில் அமெரிக்காவின் Texas மாநிலத்தின் Gulf of Mexico கரையோரத்தை தாக்க ஆரம்பித்துள்ளது சூறாவளி ஹார்வி (Harvey). கரையை தாக்க ஆரம்பித்தபோது இந்த சூறாவளியின் வேகம் சுமார் 209 km/h ஆக இருந்துள்ளது. அடுத்துவரும் நாட்களில் இந்த சூறாவளி பலத்த பாதிப்பை இங்கு விளைவிக்கும் என்று கூறப்படுகிறது.
.
வெள்ளி காலையில் வகை-1 (Category 1) ஆக மெக்சிக்கோ குடாவின் நடுப்பகுதியில் இருந்த சூறாவளி, வெள்ளி இரவு 11:00 மணியளவில் வகை-4 (Category 4) ஆக உக்கிரம் அடைந்துள்ளது.
.
அண்மையில் உள்ள Huston மாநகர் வரும் திங்கள் கிழமைக்குள் சுமார் 36″ (3 அடி) மழை வீழ்ச்சியை பெறும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. கரையோர நீர்மட்டம் சுமார் 4 மீட்டரால் உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
.
இந்த சூறாவளி கடந்த 13 வருடங்களில் அமெரிக்காவை தாக்கும் மிக பெரிய சூறாவளியாகவும், 1961 ஆம் ஆண்டின் பின் Texas மாநிலத்தை தாக்கும் மிக பெரிய சூறாவளியாகவும் இருக்கும்.
.
Atlantic மற்றும் வடகிழக்கு Pacific பகுதிகளில் சூறாவளியை hurricane என்றும், வடமேல் Pacific பகுதியில் சூறாவளியை typhoon என்றும், cyclone என்றும்,  தென் Pacific பகுதி மற்றும் இந்து சமுத்திரத்தில் சூறாவளியை cyclone என்றும் அழைக்கப்படும்.
.