அமெரிக்காவை புறக்கணித்து, புட்டினை நம்பிய ரம்ப்

Trump

இன்று பின்லாந்து நாட்டின் (Finland) தலைநகரான கெல்சிங்கி (Helsinki) என்ற நகரில் அமெரிக்காவின் ஜனாதிபதி ரம்பும், ரஷ்யாவின் ஜனாதிபதி புட்டினும் சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பின்போது ரம்ப் அமெரிக்காவின் புலனாய்வு பிரிவான FBI யை புறக்கணித்த ரம்ப், ரஷ்யாவின் ஜனாதிபதி புட்டின் கூற்றையே நம்புவதாக கூறியுள்ளார்.
.
அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான FBI தனது விசாரணைகளின் பின் 2016 ஆண்டின் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின்போது அமெரிக்காவின் கணனிகளை உளவு பார்த்தது ரஷ்யாவே என்று அறிக்கையை வெளியிட்டுருந்தது. அதையிட்டு நீங்கள் என்ன கூறுகிறீர்கள் என்று கேட்டபோது “President Putin says it’s not Russia. I don’t see any reason why it would be” என்றுள்ளார் ரம்ப்.
.
தனது சொந்த நாட்டின் புலன்விசாரணை அமைப்பை நம்பாது, எதிரியின் கூற்றை ரம்ப் நம்பியதையிட்டு அமெரிக்காவின் இரண்டு கட்சிகளின் முக்கிய உறுப்பினர்களும் விசனம் கொண்டுள்ளார்.
.
Republican கட்சியை சார்ந்த John McCain, Paul Ryan, Lindsey Graham போன்றோரும், Democratic கட்சியை சார்ந்த Chuck Schumer, முன்னாள் CIA director John Brennan உட்பட பலரும் ரம்பை சாடி உள்ளனர்.
.