அமெரிக்கா, சீனா ஏவுகணை பரிசோதனை

அமெரிக்கா, சீனா ஏவுகணை பரிசோதனை

அமெரிக்காவோ, சீனாவோ தம்முள் நேரடி யுத்தம் ஒன்றை விரும்பவில்லை என்றாலும் இருதரப்பும் தம்மை யுத்தத்துக்கு தயார் நிலையில் வைத்துள்ளன. அதன்படி கடந்த சில தினங்களில் இருதரப்பும் புதிய ஏவுகணைகளை பரிசோதனை செய்துள்ளன.

சீனா தனது DF-26 என்ற ஏவுகணையையும், DF-16 என்ற ஏவுகணையையும் அண்மையில் பரிசோதனை செய்துள்ளது. DF-26 சுமார் 4,000 km  தூரம் சென்று தாக்க வல்லது. இது அமெரிக்காவின் குஆம் (Guam) என்ற அமெரிக்க படைகளின் தீவை தாக்க வல்லது. DF-16 சீனாவுக்கு அண்மையில் உள்ள ஜப்பான், தாய்வான் போன்ற இடங்களை தாக்க வல்லது.

கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்காவும் தனது கண்டம் விட்டு கண்டம் பாயும் ICBM ஏவுகணை ஒன்றை பரிசோதனை செய்துள்ளது. கலிபோர்னியாவில் (Vandenberg Air Force Base) இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணை 6,000 km தூரம் சென்று பசுபிக் சமுத்திரத்தில் உள்ள மார்சல் (Marshall) தீவின் அருகே வீழ்ந்துள்ளது.

தென்சீன கடலிலும் சீனா கடந்த சில தினங்களாக பெரிய அளவிலான யுத்த பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளது. அதேவேளை அமெரிக்காவும் அதிகரித்த அளவில் அங்கு வேவு விமானங்களை பறக்க விட்டுள்ளது. அமெரிக்கா அங்கு மே மாதம் 35 வேவுகளையும், ஜூன் மாதம் 49 வேவுகளையும், ஜூலை மாதம் 67 வேவுகளையும் செய்துள்ளது.

புதன்கிழமை சீனா தனது புதிய Type 075 வகை amphibious கப்பலையும் கடல் பரிசோதனைக்கு விட்டுள்ளது. ஹெலிகளை இறங்கக்கூடிய இதில் சுமார் 30 ஹெலிகள் காவப்படலாம். இவ்வகை கப்பல்கள் கரையோரம் சென்று இராணுவத்தையும்,  tanks போன்ற இராணுவ தளபாடங்களையும் துறைமுகம் அற்ற எதிரியின் கரையில் இறக்க வல்லன.