அமெரிக்கா மீண்டும் UNESCOலிருந்து வெளியேறியது

UNESCO

2018 ஆம் ஆண்டு இறுதியிலிருந்து (December 31, 2018) தாம் UNESCOவிலிருந்து வெளியேறுவதாக அமெரிக்கா இன்று வியாழன் அறிவித்து உள்ளது. UNESCO இஸ்ரேலுக்கு எதிரான கருத்துக்களை கொண்டுள்ளது என்று குற்றம் கூறியே டிரம்ப் அரசு UNESCO அமைப்பில் இருந்து வெளியேறுகிறது.
.
குறிப்பாக UNESCO கிழக்கு ஜெருசலேமை (East Jerusalem) “Occupied Palestine என்றே அழைக்கிறது. அவ்வாறு அழைப்பதை இஸ்ரேல் விருப்பவில்லை. அத்துடன் 2011 ஆம் ஆண்டில் UNESCO Palestinian Authorityயை ஒரு UNESCO உறுப்பினராக இணைத்து இருந்தது. அதையும் இஸ்ரேல் விரும்பி இருக்கவில்லை.
.
2011 ஆம் ஆண்டில் இருந்து அமெரிக்கா UNESCO அமைப்புக்கான தனது பண வழங்களை நிறுத்தி உள்ளது. இவ்வாறு அமெரிக்காவால் UNESCO அமைப்புக்கு செலுத்த வேண்டிய நிலுவை தற்போது சுமார் $550 மில்லியன்.
.
1984 ஆம் ஆண்டிலும், Regan காலத்தில், இவ்வாறு அமெரிக்கா UNESCO அமைப்பில் இருந்து வெளியேறி இருந்தது. அப்போது UNESCO சோவித் யூனியன் சார்பானது என்று அமெரிக்கா குற்றம் சாட்டி இருந்தது. ஆனால் 2002 ஆம் ஆண்டில் மீண்டும் UNESCO அமைப்பில் இணைந்து இருந்தது.
.

உலகில் உள்ள பெரும்பாலான பண்டைய கட்டடங்களை பாதுகாக்க UNESCO நிதியுதவி செய்து வருகிறது.
.