அமெரிக்கா-வடகொரியா நேரடி தொடர்பு

NorthKoreaTest

அமெரிக்க அரசு வடகொரிய அரசுடன் நேரடி தொடர்புகளை கொண்டுள்ளதாக அமெரிக்காவின் வெளியுறவு செயலாளர் Rex Tillerson இன்று கூறியுள்ளார். தற்போது சீனாவின் தலைநகர் பெய்ஜிங் சென்றுள்ள Tillerson இந்த விடயத்தை தெரிவித்து உள்ளார். டிரம்ப் அரசு வடகொரியாவுடன் தொடர்புகளை கொண்டிருப்பதை ஏற்றுக்கொண்டது இதுவே முதல் தடவை.
.
பத்திரிகையாளர் தொடுத்த கேள்விகளுக்கு பதிலளித்த Tillerson, “we have a couple, three channels open to Pyongyang” என்றுள்ளார். இந்த தொடர்புகள் சீனா ஊடானதா என்று கேட்டபோது, Tillerson தாம் நேரடி தொடர்புகளை கொண்டுள்ளதாக கூறியுள்ளார் (we have our own channels”).
.
தற்போது நிலவரங்கள் “overheated” என்றும், வடகொரியா ஏவுகணைகள் ஏவுவதை நிறுத்தின், நிலைமைகள் “calm down” என்றும் கூறியுள்ளார் Tillersion.
.
டிரம்ப் அரசு தாம் வடகொரியாவின் மிரட்டல்களுக்கு அடிபணியார் என்று கூறினாலும் அடுத்துவரும் சுமார் 6 மாத  காலங்களுக்குள் அமெரிக்காவும், தென்கொரியாவும் பாரிய அளவிலான இராணுவ நடவடிக்கைகள் செய்யும் திட்டம் எதையும் கொண்டிருக்கவில்லை. அதையே சீனாவும், ரஷ்யாவும் வேண்டியிருந்தன. அத்துடன் சீனா, அமெரிக்காவும் வடகொரியாவும் நேரடி பேச்சில் ஈடுபட வேண்டும் என்றும் கூறியிருந்தது.
.

Tillersonனின் பேச்சாளர் Heather Nauert தனது கூற்றில் வடகொரிய அரசை கவிழ்ப்பது தமது நோக்கம் அல்ல என்றுள்ளார்.
.