அமெரிக்க-இந்தியரின் 4வது வங்கியும் ஆபத்தில்

NationalRepBank

 

ஆதி காலங்களில் அமெரிக்கா வந்த இந்தியர்கள் சிறுது சிறுதாக சேமித்து, படிப்படியாக பொருளாதரத்தில் வளர்ந்தவர்கள். குறிப்பாக இந்தியாவின் பட்டேல்கள் தமது பொருளாதாரத்தை வளர்த்து, அமெரிக்காவின் பல வணிகத்துறைகளில் வேரூன்றி நின்றவர்கள். Motel துறை இவர்கள் வேரூன்றிய முன்னணி வணிகங்களில் ஒன்று. சிலர் அதற்கும் மேலாக சென்று பிராந்திய அளவிலான வங்கிகளையும் ஆரம்பித்திருந்தனர். அனால் அண்மைக்காலங்களில் அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் இவர்களையும் விட்டுவைக்கவில்லை.
.
கடந்த மாதம் United States Department of Treasury இந்தியர்களால் ஆரம்பித்து, நடாத்தப்பட்டு வந்த National Republic Bank of Chicago வை தமது கட்டுப்பட்டுள் எடுத்துள்ளனர். அத்துடன் இந்த வங்கியின் CEO Hiren Patel உட்பட பல முக்கியஸ்தர்களின் பதவிகள் பறிக்கப்படுள்ளன. இரண்டு கிளைகளை கொண்ட இந்த வங்கி பொதுவாக Motel வணிகத்தில் ஈடுபடுவோருக்கு கடன் வழங்கி இருந்தது. அதில் Bharat Patel (இவர் Hiren Patel இக்கு உறவினர் அல்ல) என்பவர் மட்டும் $167 மில்லியன் கடன் பெற்றுருந்தார். அது இந்த வங்கி கொடுத்திருந்த மொத்த கடன்களின் 20% இக்கும் அதிகம். இந்த கடன்களை பெற்ற பல Motel கள் இப்போது bankruptcy யில் உள்ளன.
.
2012 ஆம் ஆண்டில் Premier Bank முடக்கப்பட்டு இருந்தது. இது Zulfikar Esmail என்ற வைத்தியரினால் Chicago பகுதில் ஆரம்பிக்கப்பட்டு இருந்தது.
.
2005 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு இருந்த All American Bank 2011 ஆம் ஆண்டில் முடக்கப்பட்டு இருந்தது.
.

2009 ஆம் ஆண்டில் Mutual Bank of Harvey முடக்கப்பட்டு இருந்தது. வேலுச்சாமி குடும்பத்தினரால் ஆரம்பிக்கப்பட்டு, நடாத்தப்பட்டு வந்த இந்த வங்கியின் பணத்தை வேலுச்சாமி குடும்பம் கையாடியதாக அரசு வழக்கு தொடுத்திருந்தது.