அமெரிக்க உதவிகளும் இராணுவ சதிகளும்

Obama

 

அமெரிக்காவின் அரசியல் புள்ளிகள் மற்றும் அந்நாட்டு பத்திரிகை துறையினர் எல்லாம் தம்மை ஜனநாயக நேயர்கள், அதற்காக முன்னின்று உழைப்பவர்கள் என்றெல்லாம் பெருமையுடன் பிரச்சாரம் செய்பவர்கள். ஆனால் வரலாறு அவையெல்லாம் பொய் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறது.

1961 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் 4ஆம் திகதி அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி John F. Kennedy அரசினால் Foreign Assistance Act அமெரிக்க சட்டமாக்கப்பட்டது. அச்சட்டம் “restricts assistance to the government of any country whose duly elected head of government is deposed by military coup or decree” என்கிறது. அதாவது ஜனநாய முறையில் தெரிவு செய்யப்பட்டு பதவியில் இருக்கும் ஒரு அரசை இராணுவ சதி மூலம் இராணுவம் கைப்பற்றின் அந்த நாட்டுக்குஅமெரிக்கா உதவி வழங்குவது அமெரிக்க சட்டத்துக்கு முரண்.

அப்படியானால் எகிப்தில் இன்று நடப்பதென்ன? ஜனநாயக முறைப்படி தெரிவு செய்யப்பட்ட மோர்சி சட்டவிரோதமாக அடைக்கப்பட்டு, coup இன் மூலம் இராணு ஆட்சி நடைபெறுகிறது. அது அவ்வாறு இருக்க அமெரிக்கா எகிப்துக்கான தனது உதவிகளை Foreign Assistance Act அமைய நிறுத்தாது ஏன்?

அமெரிக்காவின் பல வெளியுறவு சட்டங்கள் ‘ஊருக்கடி உபதேசம் உனக்கல்லடி பெண்ணே’ என்பது போலத்தான்.

1961 ஆம் ஆண்டு வைகாசி மாதம் Park Chung-hee என்பவரின் தலைமையிலான தென்கொரியாவின் இராணுவம் ஜனநாய முறைப்படி தெரிவு செய்யப்பட்டு ஆட்சியில் இருந்த Chang Myon இனது ஜனநாயக அரசை கவிழ்த்தபோது John F. Kennedy தென்கொரியாவுக்கான உதவிகளை நிறுத்தவில்லை. பதிலாக உதவிகள் பல மடங்கு அதிகரித்தன.

1963 ஆம் ஆண்டில் தென் வியட்னாம் இராணுவம் Ngo Dinh Diem இனது அரசை கவிழ்த்தபோதும் அமெரிக்கா தென் வியட்னாமுக்கான தனது உதவிகளை அதிகரித்தது. Ngo Dinh Diem கள்ள வாக்குகள் மூலம் 98% ஆதரவை பெற்றிருந்தாலும் அவரது ஆட்சியை கலைத்தது ஒரு இராணுவ கவிழ்ப்பே. ஆனால் இங்கும் Foreign Assistance Act நடைமுறை செய்யப்பட்டு இருந்திருக்கவில்லை.

1967 ஆம் ஆண்டில் கிரேக்க இராணுவம் அப்போதைய இடைக்கால அரசை கவிழ்த்தது. அந்த இராணுவத்துக்கான உதவிகளை அமெரிக்கா உடனடியாக நிறுத்தி இருந்தாலும் பின்னர் உதவிகளை பெருமளவில் உதவிகளை வழங்கியிருந்தது.

1973 ஆம் ஆண்டில் தென் அமரிக்க நாடான சிலியின் இராணுவம் ஆட்சி கவிழ்ப்பு செய்த பின் அவர்களுக்கான அமெரிக்க உதவியும் பன்மடங்கானது.

1977 இல் பாகிஸ்தான் ஜெனரல் ஜியா உல்-ஹக் (Zia ul-Haq) ஜனநாயக முறைப்படி தெரிவு செய்யப்பட்டிருந்த அலி புட்டோவின் (Zulfikar Ali Bhutto) அரசை கவிழ்த்த பின்னும் அமெரிக்காவின் உதவிகள் தொடர்ந்தன. பாகிஸ்தானின் சர்வாதிகாரி Ziaவை முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ரேகனின் front line பங்காளி என்றிருந்தார். முன்னாள் அமெரிக்க Attorney General Ramsey Clark இன் கருத்துப்படி அலி புட்டோவின் ஆட்சியை கவிழ்த்து Ziaவை ஆட்சியில் அமர்த்தியதே அமெரிக்கா தான். இங்கு நடந்தது Foreign Assistance Act இக்கு முற்றிலும் எதிர்.

1979 இல் எல் சல்வடோரின் (El Salvador) இடதுசாரி இராணுவ ஆட்சியை வலதுசாரி இராணுவ ஆட்சி கைப்பற்றியது. அப்போது வலதுசாரி இராணுவத்துக்கு அமெரிக்காவின் உதவிகள் தொடங்கின.

1980 இல் லைபீரியாவின் (Liberia) ஜனநாய முறைப்படி தெரிவு செய்யப்பட்டிருந்த William Tolbert இனது அரசை Sergeant Samuel Doe தலைமையிலான இராணுவம் கவிழ்த்திருந்தது. இங்கும் அமெரிக்காவின் உதவிகள் அதிகரித்திருந்தன.

2006 இல் ஜனநாயக முறைப்படி தெரிவு செய்யப்பட்டு ஆட்சியில் இருந்த Thaksin Shinawatra வின் தாய்லாந்து அரசை இராணுவம் கவிழ்த்தபோதும் அமெரிக்காவின் உதவிகள் தொடர்ந்திருந்தன.

இப்போது, 2013 ஆம் ஆண்டில், ஜனநாய முறைப்படி நடந்த தேர்தலில் 51.7% வாக்குகள் பெற்று தெரிவு செய்யப்பட்டு ஆட்சியில் இருந்த மோர்சி தலைமையிலான எகிப்திய அரசை அந்நாட்டு இராணுவம் மீண்டும் கைப்பற்றி உள்ளது. ஆனால் அமெரிக்க அரசு தனது வசதிக்கேற்ப இதை அலுவலக முறைப்படி coup என்று சொல்லாமல், உதவிகளை தொடர்கிறது. முபாரக்கை நீண்ட காலம் ஆட்சியில் வைத்திருந்த அமெரிக்க அரசு, முபாரக் ஆட்சி மக்கள் புரட்சியில் கவிழ்ந்தபோது உண்மைகளை மறைத்து எகிப்திய மக்களுடன் ஒட்டியது. ஆனால் சில மாதங்களுக்குள் தனது கைப்பொம்மையான இராணுவத்தை மீண்டும் பாதுகாக்கிறது.

இங்கு மிகவும் கேவலம் என்னவெற்றால், மோர்சியின் வெற்றியின் பின் அவரை வாழ்த்த தொலைபேசி அழைப்பு விடுத்த ஒபாமா “the United States will continue to support Egypt’s transition to democracy’ என்றிருந்தார். ஆனால் இப்போ ஒபாமாவின் நடத்தைகள் முன்னுக்கு பின் முரணாக உள்ளது.

நகைப்புக்குரிய இந்த அமெரிக்க சட்டப்படி, அமெரிக்க அரசு ஒரு இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பை coup என்று சட்டப்படி கூறாதவரை அது coup அல்லவாம். அதனால் எகிப்தில் நடைபெற்றது இராணுவ கவிழ்ப்பா இல்லையா என்பதை அமெரிக்க அரசு ஆராயாதவரை அது இராணுவ கவிழ்ப்பு அல்ல. அதனால் ஒபாமா அரசு Foreign Assistance Act சட்டத்தில் மீறவில்லை. இதுதான் அவர்களின் நேர்மை. இதுதான் சமாதானத்துக்கான நோபெல் பரிசு பெற்ற ஒபாமா உலகுக்கு புகட்டும் பாடம்.

மொத்தத்தில் அமெரிக்காவின் Foreign Assistance Act சட்டமானது சொந்த இலாபங்களுக்கு ஏற்ப மட்டும் பயன்படுத்த இயற்றப்பட்ட ஒரு அர்த்தமற்ற சட்டம் தான்.