அமெரிக்க குடியுரிமையை கைவிட்டார் Boris Johnson

BorisJohnson

தற்போதைய பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் Boris Johnson பிரித்தானிய, அமெரிக்கா ஆகிய நாடுகளின் குடி உரிமை கொண்டவர். ஆனால் இவர் தனது அமெரிக்க குடியுரிமையை 2016 ஆம் ஆண்டில் சட்டப்படி கைவிட்டுள்ளார் என்கிறது அமெரிக்க அரசின் ஆவணம் ஒன்று.
.
Boris Johnson பிரித்தானிய பெற்றாருக்கு அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் பிறந்தவர். அதனால் அவருக்கு அமெரிக்க குடியுரிமையும், பிரித்தானிய குடியுரிமையும் கிடைத்தது. ஆனால் அவர் ஐந்து வயதில், தனது பெற்றாருடன், பிரித்தானியா சென்றுள்ளார்.
.
இவர் 2015 ஆம் ஆண்டில் பிரித்தானியாவில் வீடு ஒன்றை விற்பனை செய்தபோது, அந்த விற்பனையால் கொண்ட இலாபத்துக்கு அமெரிக்க வருமான வரியும் செலுத்தவேண்டிய நிலை ஏற்பட்டதாம். அமெரிக்க வருமான வரி சட்டம் அந்நாட்டு குடியுரிமை கொண்ட ஒருவர் உலகின் எந்த பாகத்திலும் உழைக்கும் வருமானத்து வரி செலுத்த வேண்டுகிறது.
.

கடந்த வருடத்தில் மட்டும் 5411 நபர்கள் தமது அமெரிக்க குடி உரிமையை கைவிட்டு உள்ளனராம்.
.