அமெரிக்க சனாதிபதி போட்டிக்கு Bloomberg?

Bloomberg

Michael Bloomberg என்ற முன்னாள் நியூ யார்க் மாநகர முதல்வர் அமெரிக்காவின் Democratic கட்சி சார்பில் அடுத்த வருட சனாதிபதி தேர்தலில் போட்டியிடலாம் என்று செய்திகள் கூறுகின்றன. அவ்வாறு புளும்பேர்க் போட்டியில் குதிப்பின் இவர் Repiblican கட்சியை சார்ந்த ரம்புக்கு எதிராக போட்டியிடுவார்.
.
புளும்பேர்க் இந்த அறிவிப்பை இதுவரை நேரடியாக செய்யவில்லை. ஆனால் அவர் இந்த செய்தியை வெள்ளி அறிவிக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. முதலில் இடம்பெறவுள்ள அலபாமா (Alabama) மாநில உட்கட்சி தேர்தலில் இவர் போட்டியிடுவாரா என்பது சில தினங்களுள் தெரிந்துவிடும்.
.
விரைவில் Democrtic கட்சிக்குள்ளே அக்கட்சிக்கான சனாதிபதி தேர்தல் வேட்பாளரை தெரிவுசெய்யும் தேர்தல் இடம்பெறவுள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் இந்த உட்கட்சி தேர்தல் (primary election) இடம்பெறும். இந்த உட்கட்சி தேர்தல் முடிவில், அடுத்த வருட நடுப்பகுதியில், Democratic கட்சி வேட்பாளர் தெரிவு செய்யப்படுவார். ஏற்கனவே Democratic கட்சிக்கு உள்ள முன்னணியில் உள்ளோர் அனைவரும் மிகையான இடதுசாரிகள் என்பதால் ரம்ப் மீண்டும் வெல்லலாம் என்ற பயம் Democratic கட்சியினரையும் பயம் கொள்ள வைத்துள்ளது. Bloomberg நடுநிலையில் உள்ளவர்.
.
Bloomberg ஒருகாலம் Republican கட்சி ஆதரவாளராகவும், பின் Democrtic கட்சி ஆதரவாளராகவும் செயல்பட்டவர். அத்துடன் 2008 ஆம், 2016 ஆம் ஆண்டுகளில் சுயாதீன வேட்பாளராக அமெரிக்க சனாதிபதி தேர்தலில் போட்டியிடவும் முனைந்தவர். இவர் 3 தடவைகள் நியூ யார்க் மாநகர முதல்வராக பதவி வகித்தவர். இவரிடம் Bloomberg நிதி நிறுவனம், செய்தி நிறுவனம் ஆகியன உண்டு.
.
தற்போது 77 வயதுடைய இவரிடம் சுமார் $52 பில்லியன் சொத்துக்கள் உள்ளதாக கூறப்படுகிறது. அதேவேளை 73 வயதுடைய ரம்பிடம் சுமார் $3.1 பில்லியன் சொத்துக்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
.