அமெரிக்க பாடசாலையில் சூடு, 17 பேர் பலி

Florida

அமெரிக்காவின் Florida மாநிலத்து Parkland என்ற இடத்தில் உள்ள Marjory Stoneman Douglas High என்ற பாடசாலையில் இன்று இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுக்கு 17 பேர் பலியாகியும், மேலும் பலர் காயமடைந்தும் உள்ளனர்.
.
துப்பாக்கி சூட்டை நிகழ்த்திய 19 வயதுடைய Nicolas Cruz என்பவர் கைது செய்யப்பட்டும் உள்ளார். இவரிடம் இருந்து ஒரு AR-15 வகை ஆயுதமும் கைப்பற்றப்படுள்ளது. இச்சம்பவம் இன்று உள்ளூர் நேரப்படி பிற்பகல் சுமார் 2:40 மணியளவில் நிகழ்ந்துள்ளது. Nicolas Cruz இந்த பாடசாலையின் முன்னாள் மாணவர் ஒருவர் என்று கூறப்படுகிறது.
.
இன்று அப்பாடசாலையில் முதலில் ஒரு fire alarm பயிற்சி நிகழ்ந்துள்ளது. அதன்போது கட்டிடங்களை விட்டு வெளியேறிய மாணவர் திரும்பி பாடசாலைக்குள் நுழையும்போது மீண்டும் ஒருதடவை fire alarm ஒலித்துள்ளது. அதனால் மாணவர் மீண்டும் வெளியேற, துப்பாக்கிதாரர் சுட்டுள்ளார். இரண்டாம் fair alarm துப்பாக்கிதாரரின் வேலையாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
.

வசதி படைத்த குடும்பங்களை கொண்ட Parkland பகுதியில் சுமார் 30,000 மக்கள் வசிக்கின்றனர்.
.