அமெரிக்க வரிகளுக்கு சீனா பதில் வரிகள்

US_China

நேற்று வியாழன் அமெரிக்க ஜனாதிபதி அறிவித்த விசேட வரிகளுக்கு பதிலாக, அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு சீனா புதிய வரிகளை இன்று வெள்ளி அறிவித்து உள்ளது. இன்று அறிவிக்கப்பட்ட புதிய 15% வரிகள் முதல் கட்ட, மட்டுப்படுத்திய,  வரிகள் என்றும், வரும் நாட்களில் மேலும் வரிகள் நடைமுறை செய்யப்படும் என்றும் சீனா கூறியுள்ளது.
.
முதல் கட்ட வரிகளுக்கு அமெரிக்காவின் பழ வகைகள், wine, steel குழாய்கள், பன்றி இறைச்சி ஆகியன உட்பட 128 பொருட்கள் உள்ளாகும். அமெரிக்காவில் இவை பெரும்பாலும் கிராமப்புற, ரம்ப் ஆதரவு பகுதிகளிலேயே உற்பத்தி செய்வபடுவன.
.
அமெரிக்காவின் புதிய வரிகள் $60 பில்லியன் அளவில் இருக்கையில், சீனாவின் புதிய முதல் கட்ட பதில் வரிகள் சுமார் $3 பில்லியன் ஆக மட்டுமே இருக்கும்.
.
மறுபுறம் சீனா கொள்வனவு செய்யும் அமெரிக்க அரச முதலீடுகளை (American Treasuries) வரும் நாட்களில் சீனா குறைக்கலாம் என்றும் கருதப்படுகிறது. தற்போது சீனா சுமார் $1,170 பில்லியன் ($1.17 ரில்லியன்) அமெரிக்க treasuries களை கொள்வனவு செய்துள்ளது. அது அமெரிக்க அரசில் வெளிநாட்டுகள் வைத்துள்ள முதலீடுகளின் 19% ஆகும்.
.
அமெரிக்காவின் புதிய வரிகள் சீனாவின் பொருளாதாரத்தின் 0.1% அளவை மட்டுமே கொண்டது. அத்துடன் இந்த புதிய வரிகள் சீனாவின் மொத்த ஏற்றுமதிகளின் 2.2% மட்டுமே இருக்கும்.
.
மறுபுறம் இந்த வர்த்தக போர் தொடர்ந்தால், வடகொரியா, மத்தியகிழக்கு ஆகிய பகுதி விடயங்களில் ரம்ப் சீனாவின் ஆராவை எதிர்பார்ப்பதுவும் கடினமாகவும் இருக்கும்.

.