அமெரிக்க விமானம்தாங்கி அதிகாரி பதவி நீக்கம்

USS_Theodore_Roosevelt

USS Theodore Roosevelt என்ற அமெரிக்க விமானம் தாங்கி யுத்த கப்பலின் அதிகாரி (commander) Captain Brett Crozier வியாழக்கிழமை அவரது பதவியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். Guam தீவுக்கு அண்மையில் தற்போது தரித்து உள்ள அந்த யுத்த கப்பலில் உள்ள சுமார் 100 அமெரிக்க கடல் படையினர் கொரோனா வைரஸ் தொற்றியமையை மேற்படி அதிகாரி வெளியில் கசிய விட்டார் என்பதே இவரின் குற்றமாகும்.
.
மார்ச் மாதம் 30 ஆம் திகதி எழுதப்பட்ட, 4 பக்கங்களை கொண்ட, இந்த கடிதத்தில் “யுத்தம் அற்றம் நிலையில் ஏன் படையினர் இங்கு மரணிக்க வேண்டும்” என்று Crozier கேட்டுள்ளார்.
.
உண்மையில் எவர் இந்த செய்தியை பத்திரிகைகளுக்கு வெளியிட்டனர் என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. ரம்ப் ஆட்சியில் படைகளின் விசயங்களுள் சனாதிபதி ரம்ப் நேரடியா தலையிடுவது சாதாரணம். படைகளின் விசாரணை அண்மையில் யுத்த குற்றம் செய்த ஒரு அதிகாரிக்கு தண்டனை வழங்க, ரம்ப் தலையிட்டு தண்டனைகளை நீக்கி இருந்தார்.
.
அதிகாரி பதவி நீக்கம் செய்யப்பட்டாலும், அவரின் வேண்டுகோள்படியே சுமார் 3,000 படையினர் அந்த விமானம் தாங்கியில் இருந்து தரைக்கு எடுக்கப்படுகின்றனர். அதனால் அந்த விமானம் தாங்கி யுத்த தயார் நிலையில் தற்போது இல்லை.
.
முன்னாள் உதவி சனாதிபதி Joe Biden பதவி நீக்கத்தை கண்டித்து உள்ளார். பல அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் Crozier பதவியை மீண்டும் அவரிடம் வழங்குமாறு கேட்டுள்ளனர்.
.