அமெரிக்க வேலைவாய்ப்பு இன்மை திடீர் அதிகரிப்பு

US_Unemployment

கொரோனா வைரஸ் காரணமாக அமெரிக்காவில் வேலைவாய்ப்பு இன்மை (unemployment) கடந்த கிழமை என்றைக்கும் இல்லாத அளவில் அதிகரித்து உள்ளது. இன்று வியாழன் அமெரிக்காவின் Department of Labor விடுத்த அறிக்கையின்படி கடந்த கிழமை 3.28 மில்லியன் ஊழியர்கள் தமது வேலைகளை இழந்து, வேலை இழப்புக்கான காப்புறுதி பணம் (unemployment insurance) பெற விண்ணப்பித்து உள்ளனர்.
.
கடந்த கிழமை தமது வேலைவாய்ப்பை இழந்து காப்புறுதிக்கு விண்ணப்பித்தோரின் தொகை (3.28 million) இதுவரை கொண்டிருந்த அதி கூடிய 1982 ஒரு கிழமை தொகையிலும் (695,000) 4.7 மடங்கு அதிகம்.
.
அமெரிக்க அரசு $2 டிரில்லியன் உதவியை பொருளாதார முடக்கத்தை முறியடிக்க வழங்கும் என்று கூறி இருந்தும் தொழிலாளர் தமது வேலைகளை இழந்து உள்ளனர். கடந்த சில நாட்களாக வேலைகளை இழந்தோர் தொகை மேற்படி 3.28 மில்லியனுள் அடங்கா. அத்துடன் வரும் கிழமைகளில் மேலும் பலர் தமது வேலைவாய்ப்புகளை இழக்க நேரிடலாம்.
.
அதிக அளவில் தமது வேலைகளை இழந்து உதவிக்கு விண்ணப்பம் செய்தோர் தொகையை கொண்டோரின் சில மாநிலங்களும் அவற்றின் தொகைகளும்:
.
Pennsylvania மாநிலம்: 378,908
Ohio மாநிலம்: 187,784
California மாநிலம்: 186,809
Texas மாநிலம்: 155,657
New Jersey மாநிலம்: 155,454
Massachusetts மாநிலம்: 147,995
Washington மாநிலம்: 133,478
Michigan மாநிலம்: 129,298
Minnesota மாநிலம்: 116,438
Illinois மாநிலம்: 114,663
Nevada மாநிலம்: 93,036
.