அமெரிக்க வேவு விமானத்தை ஈரான் வீழ்த்தியது

BAMS

அமெரிக்காவின் ஆளில்லா வேவு விமானத்தை ஈரான் இன்று சுட்டு வீழ்த்தி உள்ளது. அந்த விமானம் தமது வான் பரப்புள்ள நுழைந்ததாலேயே தாம் அதை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் கூறி உள்ளது.
.
ஆனால் அந்த விமானம் சர்வதேச வான்பரப்பில் உள்ளபோதே ஈரான் சுட்டு வீழ்த்தி உள்ளது என்கிறது அமெரிக்கா. ஆனாலும் ரம்ப் தனது கூற்றில் ஈரான் தவறுதலாக சுட்டு வீழ்த்தி இருக்கலாம் என்று கூறி உள்ளார் (“I think probably Iran made mistake in shooting that dron down. It could have been somebody who was loose and stupid”).
.
அதேவேளை ரஷ்ய ஜனாதிபதி பூட்டின் அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையேயான யுத்தம் பாரிய அழிவுகளை கொண்ட ஒன்றாக இருக்கும் என்று கூறி உள்ளார்.
.
இந்த நிகழ்வின் பின் எண்ணெய் விலை 5% ஆல் அதிகரித்தது.
.
உள்ளூர் நேரப்படி வியாழன் அதிகாலை 4:05 மணியளவில் வீழ்த்தப்பட்ட வேவு விமானம் Broad Area Maritime Surveillance (BAMS-D) வகையானது. இவ்வகை விமானம் ஒன்று சுமார் $180 மில்லியன் பெறுமதியானது.

.