அமெரிக்க Capitol உள்ளே சூட்டுக்குள்ளான பெண் மரணம்

அமெரிக்க Capitol உள்ளே சூட்டுக்குள்ளான பெண் மரணம்

இன்று புதன்கிழமை அமெரிக்காவின் Capitol என்று அழைக்கப்படும் காங்கிரஸ் உள்ளே ரம்ப் ஆதரவாளர் நுழைந்து வன்முறைகள் செய்தபோது துப்பாக்கி சூட்டுக்கு உள்ளான பெண் வைத்தியசாலையில் பலியாகி உள்ளார்.

Dustin Sternbeck என்ற Metropolitan Police Department பேச்சாளர் இந்த செய்தியை தெரிவித்து உள்ளார். ஆனாலும் பலியான பெண்ணின் பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை.

இன்னோர் ஆண் சுவர்களால் ஏற முயன்று வீழ்ந்து கவலைக்கு இடமான நிலையில் சிகிக்சை பெற்று வருகிறார்.

Capitol கட்டிடம் தற்போது முற்றாக போலீசார் கைக்கு வந்துள்ளது. ஆர்பாட்டக்காரர் வீதிகளுக்குக்கு தள்ளப்பட்டு உள்ளனர். அப்குதியில் ஊரடங்கு சட்டமும் நடைமுறையில் உள்ளது.

முன்னாள் சனாதிபதியான ஜோர்ஜ் புஷ் (Republican கட்சி உறுப்பினர்) இன்று “This is how election results are disputed in a banana republic” என்று கூறி கவலைப்பட்டு உள்ளார்.