அமெரிக்க Cisco உள்ளேயும் இந்திய தாலித் பாகுபாடு

அமெரிக்க Cisco உள்ளேயும் இந்திய தாலித் பாகுபாடு

அமெரிக்காவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான Cisco Systems உள்ளேயும் இந்தியாவின் தாலித் பாகுபாடு நுழைந்து உள்ளது என்று முறைப்பாடுகள் கூறுகின்றன. இந்தியாவில் இருந்து தற்காலிகமாக அமெரிக்கா சென்று தொழிநுட்ப துறையில் தொழிபுரியும் இந்தியர் மத்தியிலேயே இது அதிகம் பரவி உள்ளது என்றாலும், நீண்ட காலம் அமெரிக்காவில் வாழும் இந்தியரும் பாகுபாட்டை தொடர்கின்றனர்.

இந்தியாவில் இருந்து கலிபோர்னியாவில் உள்ள Cisco நிறுவனத்தில் தொழிபுரிய வந்த தற்காலிக தாலித் பணியாளர்கள் தாம் அங்கு பணியாற்றும் பிராமண பணியாளர்களின் caste பாகுபாடுகளால் பாதிப்புக்கு உள்ளாகியதாக Cisco வின் human resources இல் முறைப்பாடு செய்துள்ளனர்.

அமெரிக்க சட்டத்தில் இனம், மதம், தேசியம் போன்ற வேறுபாடுகளின் அடைப்படையில் பாகுபாடு செய்வது குற்றம் என்றாலும், சாதி அந்த பட்டியலில் தற்போது இல்லை. அதனால் Cisco வின் human resources திணைக்களம் தாம் discrimination விசாரணை செய்ய முடியாது என்று கூறியுள்ளது. ஆனாலும் விசாரணைகள் தொடர்கின்றன.

அமெரிக்காவில் சிலர் சாதியயையும் (caste) பாகுபாடு செய்யமுடியாத குழுக்களின் பட்டியலில் இணைக்க முயல்கின்றனர். Cisco மட்டுமன்றி Facebook, Google, Microsoft, IBM எங்கும் இந்தியர் மத்தியில் தாலித் பாகுபாடுகள் பரவி உள்ளதாக கூறப்படுகிறது. மற்றைய இனத்தவர் இதை அறியார்.

தமக்கு உரிய உயர்வுகள் கிடைக்காத பொழுதெல்லாம் வெள்ளை இனத்தவர் செய்யும் துவேசம் என்று கூறும் இந்தியர் மறுபுறம் தாமும் பாகுபாடுகளை செய்கின்றனர்.