அம்பாந்தோட்டையில் $300 மில்லியன் சீன ரயர் நிறுவனம்

அம்பாந்தோட்டையில் $300 மில்லியன் சீன ரயர் நிறுவனம்

அம்பாந்தோட்டையில் $300 மில்லியன் பெறுமதியான ரயர் தயாரிப்பு நிறுவனம் ஒன்று அமைக்கப்பவுள்ளது. இந்த செய்தியை இலங்கை அரசு இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்து உள்ளது. இந்த ரயர் தொழிற்சாலை சீனாவின் கட்டுப்பாட்டுள் உள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு (Hambantota port) அருகில் அமையும்.

மேற்படி ரயர் தொழிற்சாலைக்கு அனுமதி வழங்கிய இலங்கை அரசு கூடவே பெருமளவு வரி விலக்குகளையும் வழங்கி உள்ளது.

சீனாவின் Shandong Haohua Tire Co. என்ற நிறுவனமே மேற்படி ரயர் தொழிற்சாலையை அமைக்கும்.

இங்கு தயாரிக்கப்படும் ரயர்களில் குறைந்தது 80% வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். மிகுதி இலங்கையில் விற்பனை செய்யப்படலாம்.

உண்மையில் Shandong Haohua Tire நிறுவனத்தின் மேற்படி தொழிற்சாலைக்கு தேவையான காணியை தற்போது அந்த காணியின் உரிமையை கொண்ட Hambantota International Port Group (HIPG) நிறுவனமே வழங்குகிறது.

கடந்த ஏப்ரல் மாதமே Shandong Haohua Tire நிறுவனம் அமெரிக்காவில் CEYLON என்ற வடிவமைப்பு ஒன்றின் trademark அனுமதிக்கு விண்ணப்பித்து உள்ளது. அதனால் மேற்படி வடிவமைப்பு அம்பாந்தோட்டை ரயர்களில் பதியப்படலாம்.