அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80% சீனாவுக்கு

SriLankaSouth

மகிந்த ராஜபக்ஸ காலத்தில் சீனாவால் கட்டப்பட்ட அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80% உரிமையை சீனாவுக்கு விற்பனை செய்ய தற்போதைய மைத்ரிபால சிறிசேன அரசாங்கம் முடிவு செய்துள்ளது. சீன நிறுவனம் ஒன்று இந்த 80% உரிமையை 1.5 பில்லியன் டொலருக்கு பெற்றுக்கொள்ளும். இந்த செய்தியை நிதி அமைச்சர் ரவி ரத்னாயக்கா தெரிவித்து உள்ளார்.
.
இந்த விற்பனை கடந்த ஏப்ரல் மாதத்தில் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கே சீனா சென்றபோது முன்வைக்கப்பட்டு இருந்தது. இந்த உடன்படிக்கையில் நவம்பர் மாதம் இரண்டாம் கிழமை கையொப்பம் இடப்படும் என்று கூறப்படுகிறது.
.
இலங்கை மூழ்கி இருக்கும் கடன் தொல்லையே இந்த விற்பனைக்கு முக்கிய காரணம். இந்த பணம் அதிகூடிய வட்டிகளை கொண்ட கடன்களை அடைக்க உதவும் என்று நிதி அமைச்சர் கூறியுள்ளார். சீனாவிடம் மட்டும் இலங்கை 8 பில்லியன் டொலர் கடன் பெற்றுள்ளது.
.
அம்பாந்தோட்டை பகுதில் 15,000 ஏக்கர் நிலத்தையும் சீனாவுக்கு குத்தகைக்கு வழங்கும் பேச்சுவார்த்தைகளும் இறுதி கட்டத்தில் உள்ளன. இங்கு சீனாவின் தலைமையில் பெரும் வர்த்தகங்கள் நிறுவப்படும்.
.

சீனா அம்பாந்தோட்டை துறைமுகத்தை தனது கடல்வழி Silk Routeயின் (Maritime Silk Road) ஒரு முக்கிய மையமாக பயன்படுத்தும். இதனால் மிகவும் விசனம் கொண்டுள்ளது இந்தியாவும், அமெரிக்காவும்.
.