அறுவடைக்கும் உரிமைகொள்ளும் Monsanto

Mnsanto Co என்பது ஒரு அமெரிக்க நிறுவனம். இந்த நிறுவனம் genetically modified பயிர்களை தயாரிப்பவர்கள். அத்துடன் அவ்வாறு தயாரித்த பயிர்களை தமது உடமையாக பெரும் பணம் செலவு செய்து பாதுகாப்பவர்கள். அண்மையில் இந்த நிறுவனம் 75 வயதுடைய Vernon Bowman என்ற அமெரிக்க கமக்காரருக்கு எதிராக வழக்கு ஒன்றை 2007 ஆம் ஆண்டில் தாக்கல் செய்திருந்தது. ஆரம்ப நீதிமன்றம் Monsanto சார்பில் தீர்ப்பு கூறி இருந்தது. இபோது இந்த வழக்கு உயர் நீதிமன்றம் செல்கின்றது.

Vernon Bowman செய்த குற்றம் என்ன? Monsanto விற்பனை செய்த genetically modified சோயா தானிய விதையை ஒரு கமக்காரர் பயிரிட்டிருந்தார். அவரின் அறுவடையில் ஒரு பகுதியை Vernon Bowman கொள்வனவு செய்து தனது நிலத்தில் பயிரிட்டார். Bowman அவ்வாறு தம்மிடம் கொள்வனவு செய்யாது பயிரிட்டமை குற்றம் என்கிறது Monsanto. அதாவது அந்த genetically modified சோயா தானியத்தின் மீதான தமது சட்டப்படியான உரிமை இரண்டாம், மூன்றாம் சந்ததிகள் (விதையில் முளைத்த பயிரில் வளர்ந்த விதைகள்) மீதும் உள்ளதாக வாதிடுகிறது.

இதே Monsanto பல ஆசிய அரிசி வகைகளையும் தமது உரிமையாக்க முனைந்து பின் அம்முயற்சியை கைவிட்டிருந்தது.