அஸ்ரேலியாவில் இந்தியாவில் திருடப்பட்ட சிவன்

India

Art Gallery of South Australia (AGSA) என்ற அஸ்ரேலியாவின் நூதனசாலையில் இந்தியாவில் திருடப்பட்ட நடனமாடும் சிவன் சிலை ஒன்று உள்ளதாக அறியப்பட்டுள்ளது. சுமார் 500 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த சிலையை இந்தியாவுக்கு மீண்டும் எடுத்துவரும் முயற்சிகள் நடைபெறுகின்றன. இந்த சிலையின் உண்மை 1958 ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றின் மூலம் அடையாள காணப்பட்டு உள்ளது.
.
இந்த சிலை இந்தியாவின் நெல்லை (Nellai) ஆலயம் ஒன்றில் இருந்து 1970 ஆம் ஆண்டுகளில் திருடப்பட்டு உள்ளது. அப்போது அங்கு 4 சிலைகள் திருடப்பட்டன. ஆனால் அப்போது இவ்விடயம் போலீசாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டு இருக்கவில்லை. 1982 ஆம் ஆண்டிலேயே இந்த திருட்டு பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.
.
இந்த சிலை 2001 ஆம் ஆண்டில், $330,000 பெறுமதிக்கு, நூதனசாலையால் ஐரோப்பிய முகவர் ஒருவர் மூலம் கொள்வனவு செய்யப்பட்டு இருந்தது. இதனை விற்பனை செய்தவரும் ஒரு ஐரோப்பியர் என்று கூறப்படுகிறது.
.
இன்னோர் $5 மில்லியன் பெறுமதியான சிவன் சிலை ஒன்று New York நகரை தளமாக கொண்ட முகவரான Subhash Kapoor என்பவரிடம் இருந்து கொளவனவு செய்யப்பட்டு இருந்தது. அந்த சிலை தமிழ்நாட்டின் அரியலூர் (Ariyalur) மாவட்டத்தில் இருந்து திருடப்பட்டது என்று தற்போது அறியப்பட்டுள்ளது.
.
1976 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் மொத்தம் 19 திருடப்பட்ட சிலைகள் இந்தியாவுக்கு மீடுக்கப்பட்டு உள்ளன.

.