அஸ்ரேலியா, சீனா முரண்பாடு, விக்ரோரியா, சீனா உடன்பாடு

China_Australia

அமெரிக்க சனாதிபதி ரம்பின் அழுத்தம் காரணமாக சீனாவுக்கும், அஸ்ரேலியாவுக்கும் இடையில் முரண்பாடுகள் படிப்படியாக உக்கிரம் அடைந்து வந்தாலும் அஸ்ரேலியாவின் ஒரு மாநிலமான விக்ரோரியாவுக்கும் (Victoria), சீனாவுக்கும் இடையே வர்த்தக தொடர்புகள் தொடர்ந்தும் வலுவடைந்து வருகின்றன. மாநில அரசின் இந்த அணுகுமுறையால் விசனம் கொண்டுள்ளது மத்திய அரசு.
.
சீனாவின் Belt and Road Initiative என்ற திட்டத்தில் விக்ரோரியா விரைவில் கையொப்பம் இடவுள்ளது. அதை வன்மையாக கண்டிக்கிறது Canberra வில் உள்ள மத்திய அரசு. மத்திய அரசின் Home Affairs அமைச்சர் Peter Dutton விக்ரோரியா மாநில அரசு சீனாவின் “propaganda” வுக்கு உடந்தையாக உள்ளது என்று கண்டித்து உள்ளார். பிரதமர் Scott Morrison னும் மாநிலத்தை கண்டித்து உள்ளார்.
.
விக்ரோரியா மாநில முதலமைச்சர் Daniel Andrew தனது பதவிக்காலத்தில் 6 தடவைகள் சீனாவுக்கு பயணங்களை மேற்கொண்டுள்ளார். அத்துடன் அவர் சீனாவின் $1.4 டிரில்லியன் வெகுதியான முதலீடுகளுக்கு ஒப்பந்தங்களையும் செய்துள்ளார்.
.
அஸ்ரேலியாவின் இரண்டாவது பெரிய நகரமான Melbourne நகரை கொண்ட விக்ரோரியா மாநிலம் 2018 ஆம் ஆண்டு $6.5 பில்லியன் வெகுமதியாக பொருட்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இப்பொருட்களை அமெரிக்காவோ அல்லது மேற்கு நாடுகளோ கொள்வனவு செய்யா.
.