அஸ்ரேலிய குடிவரவு எதிர்ப்பு செனட்டருக்கு முட்டையடி

Anning

குடிவரவாளர்களுக்கு எதிரான கடும்போக்கை கொண்ட அஸ்ரேலிய செனட்டர் (Senator) Fraser Anning கின் தலையில் இளைஞர் ஒருவர் முட்டை அடித்துள்ளார். இதனால் ஆத்திரம் கொண்ட செனட்டர் இளைஞரை தாக்க, இருவருக்கும் இடையே மோதல் உண்டானது. சூழ இருந்தோர் விரைந்து இருவரையும் கட்டுப்படுத்தினர்.
.
இந்த சம்பவம் இன்று சனிக்கிழமை மெல்பேர்ன் (Melbourne) நகரில் நிகழ்ந்துள்ளது. Hompton வாசியான 17 வயது இளைஞன் தனது இடது கையால் smart phone மூலம் வீடியோ எடுத்துக்கொண்டே வலது கையால் முட்டையை செனட்டரின் தலையின் அடித்துள்ளார்.
.
இந்த செனட்டர் நேற்று வெள்ளிக்கிழமை நியூசிலாந்தில் இடம்பெற்ற பள்ளிவாசல் தாக்குதல்களுக்கு குடிவரவு கொள்கையே காரணம் என்று கூறி இருந்தார். வெள்ளிக்கிழமை அவர் “the real cause of bloodshed on New Zealand streets today is the immigration program which allowed Muslim fanatics to migrate to New Zealand in the first place” என்று கூறி இருந்தார்.
.