ஆசியாவின் மிகப்பெரிய போதை கடத்தல்காரர் கைது

ஆசியாவின் மிகப்பெரிய போதை கடத்தல்காரர் கைது

Tse Chi Lop (வயது 56) என்ற ஆசியாவின் மிகப்பெரிய போதை கடத்தல்காரரை நெதர்லாந்து போலீசார் கைது செய்துள்ளனர். சீனாவில் பிறந்து தற்போது கனடாவில் குடியுரிமை கொண்டு வாழும் இவர் கனடா செல்ல விமானம் ஒன்றில் ஏற முற்படுகையிலேயே கைது செய்யப்பட்டு உள்ளார்.

இவரை கைது செய்ய அஸ்ரேலியா கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக முனைந்து வந்துள்ளது. அஸ்ரேலியாவுக்கு செல்லும் போதைகளின் 70% பங்கு இவர் மூலமே செல்கிறது என்று Australian Federal Police கூறியுள்ளது.
இவரை கைது செய்ய அஸ்ரேலியா 2019ம் ஆண்டே Interpol மற்றும் நெதர்லாந்து போலீஸ் அமைப்புகளின் உதவிகளை நாடி உள்ளது.

இவர் 2018ம் ஆண்டு  மட்டும் சுமார் $17 பில்லியன் பெறுமதியான போதையை விற்பனை செய்திருக்கலாம் என்று United Nation Office on Drug and Crime (UNODC) கணிப்பிட்டு உள்ளது. இந்த செய்தியை Reuters 2019ம் ஆண்டே வெளியிட்டு உள்ளது.

ஹாங் காங், Macao, தாய்வான் ஆகிய இடங்களில் வேறு பெயர்களில் வாழ்ந்து இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

ஏற்கனவே போதை கடத்தல் காரணமாக இவர் 1990ம் ஆண்டுகளில் அமெரிக்காவில் 9 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்து இருந்தவர்.