ஆப்கானிஸ்தானில் தற்கொலை தாக்குதல், 95 பேர் பலி

Afhanistan

ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் (Kabul) இன்று சனிக்கிழமை இடம்பெற்ற தற்கொலை தாக்குதல் ஒன்றுக்கு குறைந்தது 95 பேர் பலியாகியும், 200 பேர் வரை காயமடைந்தும் உள்ளனர்.
.
இந்த தாக்குதல் பழைய உள்நாட்டு அலுவலக அமைச்சின் முன் இடம்பெற்று உள்ளது. வழமையாக இந்த வீதி பொதுமக்கள் பாவனைக்கு மூடப்பட்டு இருந்தாலும், தாக்குதல் நடாத்திய வாகனம் ஒரு அம்புலன்ஸ் போல இருந்தமையால் உள்ளே நுழைய அனுமதிக்கப்பட்டு இருந்தது என்கிறது அரசு.
.
தாக்குதல் இடம்பெற்ற இடத்தில் பெருமளவு வெளிநாட்டு அமைப்புகள் நிலைகொண்டுள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்தின் கிளையும் இங்குள்ளது.
.
தலபான் இந்த தாக்குதலுக்கு உரிமை கொண்டாடி உள்ளது.
.