ஆப்கான் தோல்விகளை மறைத்தது அமெரிக்கா

Afhanistan

புஷ், ஒபாமா, ரம்ப் அரசுகள் கடந்த 18 வருட காலமாக அமெரிக்கா புரிந்துவரும் ஆப்கானிஸ்தான் யுத்த தோல்விகளை அமெரிக்க மக்களுக்கு தெரியப்படுத்தாது மறைத்து வந்துள்ளன என்று கூறுகிறது Washington Post செய்தி நிறுவனம். யுத்தத்தில் ஈடுபட்ட ஜெனெரல்கள் உட்பட சுமார் 400 யுத்த பங்காளர் (insiders) இந்த தவுகளை வழங்கி உள்ளனர்.
.
தொடரும் இந்த யுத்தத்தில் அமெரிக்கா 2,300 படையினரை இழந்துள்ளது. அத்துடன் சுமார் 20,000 படையினர் காயமானதும் உள்ளனர். அமெரிக்க அரசு ஆப்கான் யுத்த செலவை அறிவிக்காத நிலையில் Brown University விரிவுரையாளர் Neta Crawford இச்செலவு சுமார் $934 முதல் $978 பில்லியன் என்று கணிப்பிட்டு உள்ளார். இந்த தொகை ஆப்கானில் CIA செலவழித்த தொகை, மற்றும் காயமடைந்தோரை பராமரிக்க தேவைப்படும் தொகை என்பனவற்றை உள்ளடக்காது.
.
அமெரிக்காவின் அரச அமைப்பான SIGAR ( Special Inspector General for Afghanistan Reconstruction) மேற்படி நேர்முகங்களையும், தரவுகளையும் $11 மில்லியன் செலவழித்து தொகுத்து இருந்தாலும், அவை அமெரிக்க மக்களுக்கு தெரியாது மறைத்து வைக்கப்பட்டு இருந்தன. ஆனால் Washington Post செய்தி நிறுவனம் இரண்டு தடவைகள் நீதிமன்றம் சென்றே இந்த தவுகளின் 2,000 பக்கங்களை வாசித்து உள்ளது.
.
ஆப்கானை அபிவிருத்தி செய்ய செலவழித்த பணமும் விரையம் செய்யப்பட்டது என்றுளார் USAID அதிகாரி ஒருவர். அவர் “எங்களிடம் நோக்கம் எதுவும் இருக்கவில்லை. பணம் தந்து செலவழிக்கும்படி கூறப்பட்டது. நாம் நோக்கம் இன்றி செலவத்தோம்” என்றுள்ளார்.
.
சுமார் $9 பில்லியன் செலவழித்தும் அமெரிக்காவால் ஆப்கான் ஓபியம் (opium) பயிர் வளர்ப்பையும் நிறுத்த முடியவில்லை. உலகின் 82% ஓபியம் ஆப்கானில் தயாரிக்கப்படுகிறது.
.
அமெரிக்கா பயிற்சி வழங்கிய ஆப்கான் பாதுகாப்பு படையினரும் பயனற்றவர்கள் என்று கூறப்படுகிறது. ஒரு அமெரிக்க இராணுவ அதிகாரி தனது கூற்றில் மூன்றில் ஒரு பங்கு ஆப்கான் படையினர் போதை பாவனையாளர் அல்லது தலபான் அங்கத்தவர் என்றுள்ளார்.
.
2001 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஆப்கான் யுத்தத்துக்கு இதுவரை சுமார் 157,000 உயிர்கள் பலியாகி உள்ளன. அதில் 64.124 ஆப்கான் படையினர், 43,074 ஆப்கான் பொதுமக்கள், 42,100 தலபான் உறுப்பினர், 3,814 அமெரிக்க ஒப்பந்த வேலையாட்கள், 2,300 அமெரிக்க படையினர், 1,145 NATO படையினர், 424 பொதுநல சேவை உறுப்பினர், 67 பத்திரிகையாளர் ஆகியோரும் அடங்குவர். ஆனாலும் அமெரிக்காவால் நிலைமையை தனது கடுப்பாட்டுள் கொண்டுவர முடியவில்லை.
.
வியட்நாம் காலத்தில் அங்கு இடம்பெற்ற இராணுவ தோல்விகளை மறைந்தது போலவே ஆப்கான் இராணுவ தோல்விகளையும் அமெரிக்கா தம் மக்களுக்கு மறைத்து வருகின்றது என்று கூறப்பட்டுள்ளது.
.