ஆயிரத்தை தாண்டியது கொரோனா வைரஸ் மரணம்

Coronavirus

சீனாவின் வூகான் நகரத்தில் ஆரம்பித்து தற்போது உலகின் பல நாடுகள் வரை பரவியுள்ள கொரோனா வைரஸுக்கு இதுவரை மொத்தம் 1,018 பேர் பலியாகி உள்ளனர். இந்த தொகையே SARS வைரஸுக்கு பலியானோர் தொகையிலும் அதிகம். இன்று திங்கள் மட்டும் 108 பேர் சீனாவில் பலியாகி உள்ளனர். அதேவேளை 2,478 பேர் புதிதாக நோய்வாய்ப்பட்டு உள்ளமையும் தெரிய வந்துள்ளது.
.
இதுவரை 42,638 பேர் சீனாவிலும், உலக அளவில் மொத்தம் 43,100 பேரும் இந்த வைரஸின் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். சீனாவுக்கு அடுத்து ஜப்பானில் 161 பேரும், சிங்கப்பூரில் 45 பெரும், ஹாங் காங்கில் 42 பேரும் தாய்லாந்தில் 32 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
.
பாதிக்கப்படோரில் 4,026 பேர் இதுவரை குணமாகி உள்ளனர். இந்த எண்ணிக்கை வேகமாக அதிகரித்தாலேயே வைரஸ் கட்டுப்பாட்டுள் வந்துள்ளதாக கணிக்கப்படும். அந்த நிலை இதுவரை காணப்படவில்லை.
.
இந்த நோயாளரை பராமரிக்க 1,000 படுக்கைகள் கொண்ட வைத்தியசாலை ஒன்றை சீனா 10 நாட்களில் நிர்மாணித்து இருந்தது.
.
இந்த வைரஸ் காரணமாக பயணங்கள் தடைப்பட்டு, தொழில்சாலைகள் மூடப்பட்டு, பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலை தொடர்ந்தால் பல சீன தயாரிப்புக்களுக்கு உலக அளவில் விரைவில் தட்டுப்பாடு ஏற்படலாம்.
.