ஆஸ்ரேலியாவில் வெள்ளை அகதிகளுக்கு முதலிடம்?

Australia

தென் ஆபிரிக்காவில் இருந்து ஆஸ்ரேலியாவுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்த அல்லது வேறு திட்டங்கள் மூலம் சென்ற வெள்ளை இனத்தவரை விரைவுபடுத்திய செயற்பாடுகள் மூலம் அகதிகளாக ஏற்று கொள்ள ஆஸ்ரேலியா தீர்மானித்து உள்ளதாக கூறப்படுகிறது.
.
ஆஸ்ரேலியாவின் உள்நாட்டு அமைச்சர் (home affairs) Peter Dutton இந்த கருத்தை உறுதி செய்துள்ளார். அவர் தனது கூற்றில் “… we do need to look at the persecution that’s taking place” என்றுள்ளார். அத்துடன் அவர் இந்த வெள்ளை அகதிகள் கடின உழைப்பாளிகள் என்றும் விரைவாக அந்நாட்டுள் இணைகின்றனர் என்றும் கூறி உள்ளார். அத்துடன் இவ்வகை குடிவரவாளர்களையே ஆஸ்ரேலியா எடுத்துக்கொள்ளவேண்டும் என்றும் கூறியுள்ளார்..
.
2016 ஆம் ஆண்டுக்கான கணக்கெடுப்புப்படி 104,128 ஆஸ்ரேலியர்கள் தென் ஆபிரிக்காவில் பிறந்தவர்கள்.
.

தென் ஆபிரிக்காவின் புதிய ஜனாதிபதி வெள்ளையர் வசம் உள்ள பெரும் தொகை கம நிலங்களை விரைவில் கருப்பு இனத்தவர்களுக்கு பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகளை விரைவு செய்யவுள்ளதாக கூறி உள்ளார். அவரின் கருத்துப்படி தற்போதும் சுமார் 72% கம நிலங்கள் வெள்ளை இன தனியார் கைகளிலேயே உள்ளன. சுமார் 4% மட்டுமே கருப்பு தனியாரிடம் உள்ளன.
.