இத்தாலியில் மேம்பாலம் உடைந்து 22 பேர் பலி

MorandiBridge

இத்தாலியில் வாகனங்கள் ஓடும் மேம்பாலம் ஒன்று உடைந்து வீழ்ந்ததில் குறைந்தது 22 பேர் பலியாகி உள்ளனர். இத்தாலியின் Genoa என்ற நகரில் உள்ள Morandi Bridge என்ற மேம்பாலமே இவ்வாறு உடைந்து வீழ்ந்துள்ளது. இன்று செவ்வாய் வீசிய கடும் புயலே இந்த உடைவுக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.
.
சுமார் 80 மீட்டர் நீளமான உடைந்த மேம்பால துண்டு 50 மீட்டர் கீழே உள்ள புகையிரத பாதையில் வீழ்ந்தபோது அந்த பாலத்தில் பயணித்த வாகனங்களும் கூடவே வீழ்ந்துள்ளன.
.
Polcevera என்ற ஆற்றை கடக்கும் இந்த 1.2 km மேம்பாலம் 1960 ஆம் ஆண்டுகளில் நிர்மாணிக்கப்பட்டது. ஆனால் 2016 ஆம் ஆண்டில் இந்த பாலத்தில் திருத்த வேலைகளும் செய்யப்பட்டுள்ளன.
.
இந்த பாலம் ஐரோப்பாவில் பிரபலமான A10 பெரும்சாலையின் அங்கமாகும்.

.